“வேற மாதிரி என்றால் எப்படி.. அஜித்குமார் மாதிரியா..?” – போராடிய மக்களை மிரட்டிய விருதுநகர் எஸ்.பி..! – அட்டாக் செய்த EPS

EPS

விருதுநகர் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரணம் கோரி போராடிய மக்களை விருதுநகர் எஸ்.பி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா?

வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்! மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

Read more: லத்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.. Custody Violence இருக்க கூடாது..! – காவல்துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அதிரடி உத்தரவு

Next Post

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் எக்கச்சக்க நன்மைகள் இருக்கு.. தெரிஞ்சுக்கோங்க மக்களே

Thu Jul 3 , 2025
How far should women over 30 walk every day? - Must know..
walk 1 1

You May Like