“இப்படியே இருந்தா எப்படி”..? தவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த அண்ணாமலை..!!

Vijay Annamalai 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய இரு வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான ஒரு நூற்றாண்டு காலப் பிரச்சனை, தற்போது மீண்டும் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.


குறிப்பாக, மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசின் மேல்முறையீடுகள் காரணமாக இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இது இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை தூண்டக்கூடிய வாய்ப்புள்ளதால், அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சனையை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தை பாஜக நேரடியாக ஒரு மத ரீதியான கண்ணோட்டத்தில் அணுகி வருகிறது. இந்துக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாக கூறிவரும் பாஜக, இந்த விவகாரத்தில் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராகவும், ஆன்மீக விஷயங்களில் தலையிடுவதாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இந்த சிக்கலில் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். அவரது கட்சி மதச்சார்பற்ற கட்சியாகத் தன்னை முன்னிறுத்த விரும்புவதால், இந்த உணர்வுபூர்வமான விவகாரத்தில் ஏதேனும் ஒரு தரப்புக்கு ஆதரவாகப் பேசினால், அது கட்சியின் பிம்பத்தையும் அவரது எதிர்கால அரசியல் இலக்குகளையும் பாதிக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அண்ணாமலையின் அரசியல் அறிவுரை :

இந்தச் சூழலில், விஜயின் மௌனத்தை முன்னாள் தமிழக பாஜக தலைவரும் முக்கியத் தலைவருமான அண்ணாமலை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். “இந்த விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது சரியல்ல. அரசியலில் கம்முன்னு இருக்க முடியாது. பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள்” என்று விஜய்க்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Read More : FLASH | புஸ்ஸி ஆனந்த் முன்னே அடித்துக் கொண்ட தவெக தொண்டர்கள்..!! அதிர்ச்சியில் விஜய்..!! பெரும் பரபரப்பு..!!

CHELLA

Next Post

தினமும் லெமன் டீ குடிப்பவரா நீங்கள்..? என்னென்ன பக்க விளைவுகள் வரும்னு தெரிஞ்சுக்கோங்க..!

Wed Dec 17 , 2025
Are you a person who drinks lemon tea every day? Find out what side effects it can cause!
lemon tea recipe 900

You May Like