ஜிம் போகாமல் 126 கிலோவை குறைத்த 36 வயது இளைஞர்.. உடல் எடையை குறைத்தது எப்படி..?

weight loss

உடல் எடையைக் குறைக்கும் முயற்சி, பலருக்கும் கடினமானது. ஆனால் ஓஹியோவின் ரியான் கிரூவல் என்பவர், இதற்கு ஓர் உன்னதமான உதாரணமாக இருக்கிறார். 222 கிலோ எடையுடன் தொடங்கிய அவரின் வாழ்க்கைப் பயணம், தற்போது 96 கிலோ என்ற இலக்கை அடைந்திருக்கிறது.


இது தொடர்பாக அவர், சமூக வலைதளமான Reddit இல் தனது weight loss transformation கதையை பகிர்ந்துள்ளார். உணவுப் பழக்கங்களை மாற்றுவது, தினசரி நடைபயிற்சி மற்றும் மன உறுதியே, இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாக இருந்ததாக அவர் கூறுகிறார். ரியானின் இந்த பயணம், எடை குறைக்க நினைக்கும் பலருக்கும் ஊக்கம் தரும் வகையில் மாறியுள்ளது. இது போன்ற மெய்ப்பூர்வ மாற்றங்கள், இணையத்தில் வைரலாகி பலரின் வாழ்க்கையை மாற்றி வருகின்றன.

36 வயதான ரியான் கிரூவெல், முதலில் நடைப்பயிற்சியில் ஆரம்பித்து பின்னர், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் குறிப்பிட்ட உணவுமுறை மாற்றங்கள் மூலம் தனது உடல் எடையில் பாதியைக்கும் மேல் அவர் குறைத்துள்ளார். ஆரம்பத்தில் நடைப்பயிற்சி மூலம் தனது உடல் எடையைக் குறைக்க முயன்ற கிரூவெல், முழங்கால் வழியை சமாளிக்க முடியாமல், சைக்கிள் ஓட்டும் முயற்சிக்கு தள்ளப்பட்டார்.

சைக்கிள் ஓட்டுதலில் கிரூவெல்லின் அர்ப்பணிப்பு மற்றும் புரோட்டீன் உட்கொள்ளலில் கவனம் செலுத்துதல் ஆகியவை இணைந்து கலோரிகளை எரிக்க உதவியது. இதுவே குறிப்பிடத்தக்க எடை இழப்புக்கும் வழிவகுத்தது. இதுவே, அவரது உடல் எடையை 124 கிலோவைக் குறைக்க உதவியது. கிரூவெல், “சைக்கிள் ஓட்டுதல் என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது” என்ற தலைப்பில் ரெடிட்டில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது 4,300க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.

தனது கடந்த கால வாழ்க்கை முறையைப் பற்றி பேசிய கிரூவெல், “ஜனவரி 2023இல் நான் 222 கிலோ உடல் எடையைக் கொண்டிருந்தேன். எனக்கு அப்போது 34 வயது, எனது ஆரோக்கியத்தை சரிசெய்ய வேண்டும், இல்லையெனில் எனது வாழ்நாள் குறுகியதாகிவிடும் என்று நான் நினைத்தேன். இதனால் நான் அதிகமாக நடக்க ஆரம்பித்தேன், நன்றாக சாப்பிட ஆரம்பித்தேன். வறுத்த உணவுகள், இனிப்புகள், ஆல்கஹால் போன்றவற்றை குறைத்தேன்” என தெரிவித்துள்ளார்.

இதனை பின்பற்றிய சில மாதங்களிலே உடலில் மாற்றங்களை உணர்ந்தேன். இது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. ஏனென்றால், ஒருபோதும் எனது உடல் எடை இந்த அளவு குறைந்ததில்லை. இன்று எனது எடை 96 கிலோ. இன்னும் குறைக்க விரும்புகிறேன், நான் நினைத்தது போல 100% மாற விரும்புகிறேன். சைக்கிள் ஓட்டுதல் தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது” என தெரிவித்தார்.

Read more: மீண்டும் மீண்டுமா..? அமைச்சர் பிடிஆரை ரவுண்டு கட்டி அடிக்கும் திமுக..? தீவிர ஆதரவாளர்களை அடுத்தடுத்து நீக்குவதால் அதிருப்தி..!!

Next Post

பாஜக - அதிமுக கூட்டணியில் பாமக..? அன்புமணியின் அடுத்த மூவ் இதுதான்..!! விரைவில் பொதுக்குழு..? உடைந்துபோன ராமதாஸ்..!!

Sat May 31 , 2025
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மனகசப்பை போக்க சமாதான முயற்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இரு தரப்பும் சுமுகமாக செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ராமதாஸின் செய்தியாளர்கள் சந்திப்பு இந்த பிரச்சனையை மேலும், அதிகப்படுத்தவே செய்தது. தனது மகன் அன்புமணி மீதான குற்றச்சாட்டை நான்கு சுவற்றுக்குள் வைத்து பேசியிருக்கலாம் என்றும், பொதுவெளியில் வைத்து அவரை அவமானப்படுத்தி விட்டதாகவும், பாமகவினரே கூறி வருகின்றனர். இதற்கிடையே, […]
Anbumani 2025 1

You May Like