மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய விவரத்தை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார தடை இன்றி மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு மாதந்தோறும் உதவி தொகைகளையும் தமிழரசு வழங்கி வருகிறது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாதந்தோறும் தகுதி உள்ள மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பொருளாதார தடை இன்றி கல்வியை தொடர் முடிகிறது. அந்த நிலையில் மற்றொரு திட்டத்தை தமிழரசு தின அவர்களுக்கு செயல்படுத்த உள்ளது. அதுதான் கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம். ஏற்கனவே தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு முன் கல்வி வழங்கும் திட்டத்தை செயல்பட்டு வந்தது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு திட்டம் கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்ற பிறகு அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது கைக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
2025-2026 தமிழக பட்ஜெட்டில் மிக அமைச்சர் தங்கம் தென்னரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் பணியில் தமிழக அரசும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தது.முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டது. அதற்கு ஏற்ப மூன்று நிறுவனங்களும் இருந்து தமிழக அரசு கொள்முதலும் செய்தது. இந்த நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய விவரத்தை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: 2014-15 முதல் 2020-21-ம் ஆண்டு வரை பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்ட விவரங்களை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை கோரியுள்ளது. இதையடுத்து அந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்ட நாள் மற்றும் அவை பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட நாள் ஆகிய விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



