மக்களே…! உங்க நிலத்தின் கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றம் செய்வது எப்படி…?

Tn Government registration 2025

கூட்டுப் பட்டா என்பது ஒரு நிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்போது வழங்கப்படும் பட்டா ஆகும். இதில், நிலத்தின் உரிமையாளர்கள் அனைவரும் கூட்டாக குறிப்பிடப்படுவார்கள். நிலத்தின் பரப்பளவு மற்றும் ஒவ்வொரு உரிமையாளரின் பங்கு, தனித்தனியாக பிரிக்கப்படாமல், ஒன்றாக குறிப்பிடப்படும். இது நிலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், கூட்டுப் பட்டாவாக இருக்கும் நிலங்களை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.


கூட்டுப் பட்டா என்றால் என்ன…? ஒரு நிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உரிமையாளர்களாக இருக்கும்போது, அவர்களுக்கு வழங்கப்படும் பட்டா கூட்டுப் பட்டா எனப்படும். உதாரணமாக, ஒரு குடும்பத்தில் உள்ள பல சகோதரர்கள் ஒரு நிலத்தை கூட்டாக வாங்கும் போது, அந்த நிலத்திற்கான பட்டா கூட்டுப் பட்டாவாக இருக்கும்.

தனிப் பட்டா: ஒரு நிலத்தில் ஒரே ஒரு உரிமையாளர் மட்டுமே இருந்தால், அவருக்கு வழங்கப்படும் பட்டா தனிப் பட்டா ஆகும். இந்த பட்டாவில் நிலத்தின் உரிமையாளர் பெயர், சர்வே எண், உட்பிரிவு எண் போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கூட்டுப் பட்டா:ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்போது வழங்கப்படும் பட்டா கூட்டுப் பட்டா ஆகும். இதில், நிலத்தின் உரிமையாளர்கள் அனைவரும் கூட்டாக குறிப்பிடப்படுவார்கள். நிலத்தின் பரப்பளவு மற்றும் ஒவ்வொரு உரிமையாளரின் பங்கு, தனித்தனியாக பிரிக்கப்படாமல், ஒன்றாக குறிப்பிடப்படும்.

கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி..?

கூட்டு பட்டாவில் இருந்து தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி செலுத்திய ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். மற்ற உரிமையாளர்கள் ஒப்புதல் தராவிட்டால் கோர்ட் மூலம் பெறலாம்

Vignesh

Next Post

ஏசி காற்றில் எழுப்ப எழுப்ப தூங்கிய மருத்துவர்!. விபத்தில் சிக்கியவர் ஸ்ட்ரெச்சரிலேயே துடிதுடித்து பலியான சோகம்!. வைரல் வீடியோ!

Wed Jul 30 , 2025
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், பணியில் இருந்த மருத்துவர் தூங்கிக் கொண்டிருந்ததால், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததாக வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த திங்கள் கிழமை மாலை விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் சுனில் என்பவர் லாலா லஜபதி ராய் நினைவு (LLRM) மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, […]
doctor sleep Accident victim dies 11zon

You May Like