மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி…? முழு விவரம் இதோ

pm house Scheme 2025

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.


இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொண்டு வரப்பட்டது.

மேலும், அரசு தரப்பில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வீடுகளை கட்டி முடித்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மூன்று தவணையாக பணம் வழங்கப்படும். முதல் தவணையாக 50,000.., இரண்டாவது தவணையாக 1.50 லட்சம், மூன்றாவது தவணையாக 50,000 வழங்கப்படுகிறது. மொத்தம் 2.50 லட்சம் ரூபாயில் 1 லட்சத்தை மாநில அரசு வழங்குகிறது. மத்திய அரசு 1.50 லட்சம் மானியமாக கிடைக்கும்.

இந்த திட்டம் முதன்மையாக அனைவருக்கு வீட்டு வசதி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. எனவே ஏற்கனவே ஒரு வீட்டை சொந்தமாகக் கொண்டவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் நன்மையை பெற தகுதி கிடையாது. புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள். இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் https://pmaymis.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை..!! முதல் நாடாக சட்டம் இயற்றியது ஆஸ்திரேலியா..!!

Thu Nov 13 , 2025
உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக பதின்ம வயது சிறுவர்கள் (16 வயதுக்குட்பட்டோர்) இதில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும், குழந்தைகளின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், சமூக ஊடகங்களின் தீய தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா ஒரு முன்னோடி முடிவை […]
Social Media 2025

You May Like