நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனித தொண்டையில் இதுவரை அறியப்படாத ஒரு புதிய உறுப்பைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, குறிப்பாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் நோயாளிகளுக்கான கதிர்வீச்சு சிகிச்சை முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? புரோஸ்டேட் புற்றுநோயை கண்டறியப் பயன்படும் PSMA PET-CT ஸ்கேன் செய்யும் போது, ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக மூக்கின் பின்னால் இரு பகுதிகள் அதிகமாக ஒளிர்வதை கவனித்தனர். பின்னர், 100 நோயாளிகளின் ஸ்கேன்கள் மற்றும் 2 சடல ஆய்வுகள் மூலம் இவை உண்மையான புதிய உமிழ்நீர் சுரப்பிகள் என உறுதி செய்யப்பட்டது.
இடம்: தொண்டையின் மேல் பகுதி, மூக்கின் பின்னால் (நாசோபார்னக்ஸ்).
அளவு: சுமார் 3.9 செ.மீ நீளம்.
பணி: தொண்டையை ஈரப்படுத்தி, விழுங்குதல் மற்றும் பேசுதல் சுலபமாகும்.
உறுதி: 100க்கும் மேற்பட்ட நோயாளி ஸ்கேன்கள் மற்றும் இரண்டு சடல ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
முக்கியத்துவம் : புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைக்கும் சாத்தியம்.
புற்றுநோய் சிகிச்சையில் தாக்கம்: கதிர்வீச்சு சிகிச்சை, பெரும்பாலும் உமிழ்நீர் சுரப்பிகளை சேதப்படுத்துகிறது. இதனால் நோயாளிகளுக்கு சாப்பிட, பேச, விழுங்க சிரமம் ஏற்படுகிறது. புதிய சுரப்பிகள் மீது கதிர்வீச்சு அதிகமாகப் பட்டால், பக்கவிளைவுகள் அதிகரிப்பதை ஆராய்ச்சி உறுதிசெய்துள்ளது. எதிர்காலத்தில், இச்சுரப்பிகளை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிகிச்சை திட்டமிடப்பட்டால், நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
மனித உடற்கூறியல் பல நூற்றாண்டுகளாக ஆராயப்பட்டிருந்தாலும், இப்போது கண்டுபிடிக்கப்பட்ட டியூபரியல் உமிழ்நீர் சுரப்பிகள் மருத்துவ அறிவுக்கு புதிய பரிமாணம் சேர்த்துள்ளன. அடுத்த கட்ட ஆய்வுகள் மூலம், கதிர்வீச்சு சிகிச்சையின் பக்கவிளைவுகளை குறைக்கும் புதிய வழிமுறைகள் உருவாகக்கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Read more: தென் கொரிய விபச்சாரிகள் ஏன் அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர் ? என்ன விஷயம்?