கணவர் மரணம்..!! கொழுந்தனாரின் சேட்டை ஆரம்பம்..!! ஜன்னலில் கையை விட்டு..!! கதறி அழும் பெண்..!!

மயிலாடுதுறையில கணவனை இழந்த பெண்ணுக்கு கணவனின் தம்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்க வந்த 2 குழந்தைகளின் தாய், மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியின் காலில் விழுந்து கதறி அழுது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் கீழையூர் காசா நகரில் வசித்து வந்த கனிமொழி என்ற பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தின் போது, தமது இரு குழந்தைகளையும் அழைத்துச் சென்று புகார் அளித்தார். அப்போது அவர், எஸ்பி மீனாவிடம் கூறும் போது, கணவரின் தம்பி தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சீர்காழி சரக டிஎஸ்பியை அழைத்து, பெண்ணிடம் விசாரித்து கணவர் வீட்டாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு மயிலாடுதுறை எஸ்பி மீனா உத்தரவிட்டார். இதுபற்றி அந்த பெண் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எனது கணவர் 2018ஆம் ஆண்டே இறந்துவிட்டார். அதன்பிறகு என் மாமியார் வீட்டில் தான் வசித்து வந்தேன். என் அம்மா தான் தேவையான உதவிகளை செய்து வந்தார். என் கொழுந்தனாராலோ, மாமியாரோலோ எந்த பயனும் இல்லை. எந்த உதவியும் அவர்கள் செய்யவில்லை. இப்படியான சூழலில் என் கொழுந்தனார் எனக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

கொல்லை பக்கமாக கல்லை விட்டு அடிப்பது, குச்சியை விட்டு எழுப்புறது. ரூமில் ஜன்னலில் கையை விடுவது போன்றவற்றை என் கொழுந்தனார் செய்து வந்தார். இப்படி தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால், அறையின் ஜன்னல்களை நான் லாக் செய்துவிட்டேன். என் மாமியாரிடம் சொன்ன போது, அணுசரித்து தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.நான் கொழுந்தனிடமே, இப்படி பேசும் வேலை வைத்துக்கொள்ளாதே என்று கூறிய போது, நீ சொல்வதை நம்புவார்களா.. நான் சொல்வதை நம்புவார்களா என்று என்னை மிரட்ட ஆரம்பித்தார்.

இதனால் கொழுந்தனார் பேசும் அனைத்தையும் ரெக்கார்டு செய்தேன். ஆனால் என் செல்லில் ரெக்கார்டு இருப்பது தெரிந்ததும், என் மாமியார் அதனை பிடுங்கி உடைத்துவிட்டார். என்னிடம் தாலி செயினையும் பறித்துக் கொண்டு அடித்து விரட்டி விட்டார். இதனால் வேறு வழியில்லாமல் என் அப்பா வீட்டிற்கே வந்து விட்டேன்.மாவட்ட ஆட்சியரிடம் இத்துடன் 4-வது முறையாக மனு அளித்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதற்கு மேல் போராட என்னிடம் சக்தி இல்லை. இதனால் என்னுடைய அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் ஒப்படைத்துவிட்டு என்னை கருணை கொலை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

Chella

Next Post

'இனி தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை’..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tue Oct 31 , 2023
இலங்கையை தொடர்ந்து மற்றொரு ஆசிய நாடு இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியர்கள் இப்போது 30 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்திற்குச் செல்ல முடியும். இந்த சேவை நவம்பர் 2023 முதல் மே 2024 வரை நீடிக்கும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பரில், சீன சுற்றுலா பயணிகளுக்கான விசா தேவையை தாய்லாந்து ரத்து செய்தது. தற்போது தாய்லாந்தில் இந்தியர்களுக்கு விசா ஆன் […]

You May Like