கணவருக்கு 520 பெண்களுடன் கள்ளத்தொடர்பு..!! பள்ளி பருவத்திலேயே இந்த பழக்கம்..!! விஷயம் தெரிந்து மனைவி செய்த செயல்..!!

Women 2025

ஜப்பானை சேர்ந்த நேமு குசானோ என்ற பெண், தனது கணவரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான குணமுடையவர் என்று நம்பி கரம் பிடித்த கணவருக்கு, சுமார் 520 பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.


திருமணத்திற்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்த நிலையில்தான் குசானோவுக்கு தனது கணவரின் நடத்தை மீது சந்தேகம் எழுந்தது. கணவரின் பையில் இருந்த சில மருந்துகள் மற்றும் அவரது கைப்பேசிக்கு தொடர்ந்து வந்த குறுஞ்செய்திகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து குசானோ தீவிரமாக விசாரித்தபோது, மொத்தம் 520 பெண்களுடன் கணவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

குறிப்பாக, இவர்களது மகனுக்கு அரிய வகை நோய் பாதிப்பு இருந்த கடினமான காலகட்டத்திலும், அவரது கணவர் எந்தப் பொறுப்பும் இல்லாமல் இத்தகைய செயல்களில் ஈடுபட்டது குசானோவை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்கியது. இது குறித்து மருத்துவ வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றபோது, குசானோவின் கணவர் பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒருவிதமான உளவியல் ரீதியான பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

தொடக்கத்தில் மகனின் எதிர்கால நலனுக்காக பொறுமை காத்த குசானோ, ஒருகட்டத்தில் இனியும் அவருடன் வாழ முடியாது என்பதை உணர்ந்து அவரிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்தார். தற்போது தனது குழந்தையை தனி ஆளாக வளர்த்து வரும் அவர், சவால்கள் நிறைந்த தனது வாழ்க்கை அனுபவத்தைச் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் மாற்றியுள்ளார்.

தனது கசப்பான திருமண வாழ்க்கையை அப்படியே விட்டுவிடாமல், அதிலுள்ள வலிகளையும் அனுபவங்களையும் நகைச்சுவை கலந்த சித்திரங்களாகவும், புத்தகமாகவும் அவர் வெளியிட்டுள்ளார். உறவுகளில் நிலவ வேண்டிய நேர்மை மற்றும் மனநலத்தின் அவசியத்தை வலியுறுத்தும் இவரது படைப்பு, தற்போது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Read More : ரேஷன் கடைகளில் பெண்களுக்கு இலவச நாப்கின்..? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

CHELLA

Next Post

அரசுப் பள்ளி மாணவன் பலியான விவகாரம்.. தந்தைக்கு அரசு வேலை.. போராட்டம் வாபஸ்!

Wed Dec 17 , 2025
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுப்பள்ளிகளின் […]
thiruvallur student

You May Like