கள்ளக் காதலியுடன் ஜாலியாக இருந்த கணவர்.. நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவி.. வைரல் வீடியோ..

Kalesh 42

உ.பி.யின் ஹாப்பூரில் உள்ள ஹோட்டலில் கணவரின் காதலியுடன் காபி குடிப்பதை பார்த்த மனைவி, அந்த பெண்ணை நடுரோட்டிலேயே கடுமையாக தாக்கினார்..


உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது கள்ளக்காதலியை சந்திக்கச் சென்ற திருமணமான நபர் ஒருவரை அவரது மனைவி கையும் களவுமாகப் பிடித்தார். அந்த நபரின் மனைவிக்கும் அவரது கள்ளக்காதலிக்கும் இடையே நடந்த மோதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

தனது கணவரை வேறொரு பெண்ணுடன் பார்த்த மனைவி கோபமடைந்து, நடு ரோட்டிலேயே அந்த பெண்ணை அடிக்கத் தொடங்கினார். இந்த வாக்குவாதம் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது, இதனால் அங்கு பெரும் கூட்டம் கூடியது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே இந்த சம்பவம் நடந்தது.

தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகம் அந்த மனைவிக்கு ஏற்பட்டுள்ளது… இதனால் வியாழக்கிழமை மதியம், மனைவி சந்தையில் இருந்தபோது, தனது கணவர் அவரின் கள்ளக் காதலி உடன் இருப்பதைக் கண்டார். அவர்களை பின்தொடர்ந்து சென்ற அவர், ஒரு ஹோட்டலில் அவர்களை கையும் களவுமாக பிடித்தார். மேலும் ஆத்திரமடைந்த மனைவி காதலியை தெருவில் இழுத்துச் சென்று தாக்கத் தொடங்கினார், அதே நேரத்தில் கணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அருகில் இருந்த ஒருவர் இந்த சம்பவத்தைப் பதிவு செய்து, வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ விரைவில் வைரலானது. மனைவி தனது கணவரின் கள்ளக்காதலியை அறைந்து உதைக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன..

இரண்டு பெண்களும் தெருவில் வாக்குவாதம் செய்வதை போலீசார் கவனித்ததை அடுத்து, அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இன்ஸ்பெக்டர் பட்னிஷ் குமார் தெரிவித்தார். பொது இடங்களில் சண்டையிட்டதற்காக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

RUPA

Next Post

நடிகை ரம்யாவுக்கு ரேப், கொலை மிரட்டல்.. 2 பேர் கைது.. மேலும் 11 பேரை தீவிரமாக தேடும் போலீசார்..

Sat Aug 2 , 2025
ஆபாச செய்திகளை வெளியிட்டதாகவும், முன்னாள் மண்டியா எம்.பி.யும் நடிகையுமான ரம்யாவுக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி இரண்டு பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது இந்த வார தொடக்கத்தில் நடிகை திவ்யா ஸ்பந்தனா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய போலீஸ் கமிஷனர், “ஆன்லைனில் […]
FotoJet 1

You May Like