கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த மாதவன் நாயர் – ரேணுகா மேனன் தம்பதியினர், கடந்த 25 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மாதவன் வெற்றிகரமாக தொழில் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்கு கிஷோர் என்ற 17 வயது மகன் உள்ளார். ஆனால், 2020-ல் ஏற்பட்ட கொரோனா நெருக்கடியால் தொழில் பாதிக்கப்பட்ட மாதவன், வெளிநாட்டில் மேலாளராக பணிபுரியச் சென்றார்.
மகன் கிஷோரின் படிப்பிற்காக, ரேணுகா மகனுடன் கோட்டயத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்குத் தங்கினார். அதே குடியிருப்பில், அதே பள்ளியில் கிஷோருடன் படித்த ஆல்பர்ட் ஜான் என்ற மாணவன் வசித்தான். இதனால் இரு குடும்பங்களுக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், ரேணுகா (45) பக்கத்து வீட்டு மாணவரான ஆல்பர்ட் ஜானுடன் நட்பை தொடங்கி, படிப்படியாக பாலியல் உறவை ஏற்படுத்திக் கொண்டார். மகனின் வயதில் இருக்கும் அந்த இளைஞரை ரேணுகா, தனது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தத் தொடங்கினார். இருவரும் தனிமையில் சந்தித்து, வெளியிடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்ததோடு, அந்தரங்கக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளனர்.
சமீபத்தில், தாயின் செல்போனை தற்செயலாகப் பயன்படுத்திய மகன் கிஷோர், அந்தரங்கப் படங்களைப் பார்த்து ஆடிப்போனான். இதுகுறித்து தாயிடம் சண்டை போட்ட கிஷோர், “அவன் உங்களுக்கு மகன் போல தானே? என் வயதுடையவன் தானே?” என்று கோபமாகக் கேட்டு, உடனடியாக குவைத்தில் இருந்த தந்தை மாதவனுக்கு தகவல் கொடுத்தான்.
இதையடுத்து, அவசரமாக ஊர் திரும்பிய மாதவன் நடத்திய விசாரணையில், ஆசை வார்த்தை கூறி ரேணுகா அந்த மாணவரை பயன்படுத்தியது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து ஆல்பர்ட் ஜானின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் ரேணுகாவின் சூழ்ச்சி உறுதியானதை தொடர்ந்து, மாணவரின் வயது கருதி, ரேணுகா மேனன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
மறுபுறம், பாதிக்கப்பட்ட மாதவன் நாயர், தனது மனைவியிடமிருந்து சட்டரீதியான விவாகரத்து நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். உணர்ச்சிவசப்படாமல், சட்டத்தின் மூலம் பிரச்சனை தீர்க்கப்பட்டதால், குற்றவாளி மட்டுமே தண்டிக்கப்பட்டு, மற்றவர்கள் பாதிக்கப்படவில்லை என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
Read More : தமிழக விவசாயிகளே..!! இனி உங்களுக்கு ரூ.2,000 கிடைக்காது..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



