கிருஷ்ணகிரி மாவட்டம் போயர் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநரான ராஜதுரை (30), கல் குவாரியில் வேலை செய்தபோது ஏற்பட்ட தகாத உறவு, பின்னாளில் பணப் பிரச்சனையாக மாறி, கொலை மிரட்டல் மற்றும் கத்திக்குத்தில் முடிந்துள்ளது. மாந்தோப்பு ஒன்றில் ராஜதுரை மீது நடந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (நவம்பர் 4) மாந்தோப்பில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் உள்ள தோட்டத்து மக்கள், ராஜதுரை ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கையில் ஆழமான காயத்துடன் துடித்துக் கொண்டிருந்த அவரை மீட்டு, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனளிக்காததால், அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த தாக்குதலை நடத்திய மர்மக் கும்பல் இருளில் தப்பிச் சென்ற நிலையில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். விசாரணையில், ராஜதுரைக்கும், கல் குவாரியில் வேலை பார்த்த மூக்கா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுப் பெண் ஒருவருக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ள உறவாக மாறியது தெரியவந்தது.
கணவர் இறந்த நிலையில், 3 மகன்களுக்காக கூலி வேலை செய்து வந்த அந்தப் பெண்ணுக்கு, ராஜதுரை தனது சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்திருந்தார். பணத்தைப் பெற்ற சில நாட்களில், தனது மகன்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உறவை தொடர அந்தப் பெண் மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ராஜதுரை, கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு மிரட்டியுள்ளார். பொங்கல் சமயத்தில் ரூ.50,000 மட்டும் திரும்பக் கொடுக்கப்பட்ட நிலையில், மீதி பணத்திற்காக ராஜதுரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் சென்னைக்குச் சென்ற நிலையில், சொந்த கிராமத்துக்குத் திரும்பி வந்த அவரைக் கண்டுபிடித்து ராஜதுரை சண்டையிட்டுள்ளார்.
பின்னர், தாய்க்கு ஏற்பட்ட அவமானத்தை அறிந்த அந்தப் பெண்ணின் மூத்த மகன், கிராமத்தின் பாமக பிரமுகரும், குற்றச் சம்பவப் பின்னணி கொண்டவருமான பாவேந்தன் என்பவரை அணுகி, ராஜதுரையை மிரட்ட சொல்லியுள்ளார். இதையடுத்து, ராஜதுரையை மாந்தோப்புக்கு வரவழைத்துள்ளார். அங்கு, பாவேந்தன் தலைமையில் அர்ஜுன், கேசவன், தினேஷ் உள்ளிட்ட இளைஞர்கள் கத்தியுடன் தயாராக இருந்தனர்.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் வந்த ராஜதுரையை அவர்கள் கடுமையான வார்த்தைகளால் மிரட்டியதுடன், பாவேந்தன் கத்தியால் குத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ராஜதுரையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்தப் பெண், பாவேந்தன், அர்ஜுன், கேசவன், தினேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : தமிழக விவசாயிகளே..!! இனி உங்களுக்கு ரூ.2,000 கிடைக்காது..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



