மாமல்லபுரத்தில் இன்று தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசார நிர்வாக பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ‛‛விஜய் மக்கள் இயக்கமாக இருந்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி மக்களிடம் போய் பிரசாரம் செய்கிறார். உச்ச சம்பளத்தை உதறிவிட்டு நம் மக்களுக்காக அரசியலில் இறங்கியுள்ளார்.
கரூரில் சூழ்ச்சி செய்த திமுக இன்று மக்கள் மத்தியில் குற்றவாளியாக நிற்கின்றது. திமுகவின் பொய் பிரச்சாரங்களை தன்னுடைய அமைதியின் மூலம் முறியடித்து மௌன புரட்சியை தலைவர் செய்திருக்கின்றார். நாங்கள் ஓடி விட்டோமா? நாங்கள் தலைமறைவாகிவிட்டோமா? கலைஞரை கைது செய்த போது அவருடைய மகன் ஓடினாரே அந்த வரலாற்றை நாங்கள் பேசட்டுமா. வரலாறு பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்..
நிர்வாகிகள் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை மட்டும்தான் நாங்கள் சொல்ல முடியும். ஆனால் மக்கள் எவ்வளவு வருவார்கள் என்று எங்களால் எப்படி சொல்ல முடியும்? இதனை நீங்கள் கணிக்க முடியவில்லை என்றால் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்து விடுங்கள். இதை கணிக்காமல் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? கரூர் விவகாரத்தை 2 நாளில் கடந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். என் குடும்பத்தில் இழப்பு ஒன்று நடந்தால் நான் 30 நாள் வீட்டில்தான் இருப்பேன் என்றார்.
மேலும் திமுகவுக்கு 10 ஆண்டு வேலை செய்ததற்காக தமிழக மக்கள் முன்பு நான் பாவ மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்தபோது ரொம்ப நல்ல கட்சி, நல்லவர்களாக தெரிந்தார்கள். ஏன் நம் தலைவரே தேர்தல் நாளில் கருப்பு – சிவப்பு சைக்கிளில் வந்து ஆதரவு கொடுத்தார். அந்த நன்றியுணர்வு உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லை.
Read more: ‘உங்கள் கோவில்களுக்கே போங்க’: பாகிஸ்தானில் ஹிந்து பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..



