“உங்களை நம்பி தான் வந்தேன்.. என்னை விட்ருங்க டா”..!! ஃபுல் போதையில் தோழியை கூட்டு பலாத்காரம் செய்த நண்பர்கள்..!!

West Bengal 2025

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 20 வயது இளம்பெண் ஒருவரை அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.


கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த இளம்பெண் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கொண்டாட்டம் முடிந்ததும், நண்பர்களான சந்தன் மாலிக் மற்றும் தீப் ஆகியோர் அந்தப் பெண்ணை ரெஜண்ட் பார்க் பகுதியில் உள்ள தீப்பின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு உணவருந்திய பிறகு, வீட்டிற்கு செல்லத் தயாரான அந்தப் பெண்ணை இருவரும் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், அந்த இளம்பெண்ணை இருவரும் சேர்ந்து மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தக் கொடூரமான சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், நேராக வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி கதறி அழுதுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்ட சந்தன் மாலிக் மற்றும் தீப் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : முன்கூட்டியே தயாராக இருந்த 20 சவக்குழிகள்..!! மயானத்தை பார்த்து பீதியில் உறைந்துபோன பொள்ளாச்சி மக்கள்..!!

CHELLA

Next Post

ஆந்திராவில் தீவிரமடைந்த மர்மநோய்!. 20 பேர் பலியான பயங்கரம்!. சுகாதார அவசர நிலை பிரகடனம்!.

Mon Sep 8 , 2025
ஆந்திராவின் குண்டூரில் பரவும் மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – பா.ஜ., – ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு குண்டூர் மாவட்டத்தில் உள்ள துரகபாலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மர்ம நோய் பரவி வருகிறது. இரு மாதங்களில் மட்டும் மர்ம நோயால் […]
andhra Mysterious disease

You May Like