கொறடாவை மாற்ற கோரி பாமக எம்.எல்.ஏக்கள் மனு.. தன்னை நீக்க முடியாது என எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..

anbumani arul

பாமக சட்டப்பேரவை கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார்

பாமகவின் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டி உள்ளது. தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கட்சி நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளையும் அறிவித்தும் இருவரும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் நேற்று முன் தினம் பாமக எம்.எல்.ஏ அருளை கட்சியில் இருந்து நீக்குவதாக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருள் நீக்கப்படுவதாகவும், பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமிக்க அன்புமணி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சபாநாயகரை சந்தித்து இந்த மனுவை அளித்தனர். அன்புமணியின் ஒப்புதலுடனே இந்த மனு அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்.

ஆனால் பாமக சட்டப்பேரவை கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார். சட்டமன்ற பாமக குழு தலைவர் ஜி.கே மணி அனுமதி பெறாமல், அவரின் கையெழுத்து இல்லாமல் என்னை நீக்க முடியாது என்று கூறியுள்ளார். இன்று சபாநாயகரை சந்தித்து பாமக எம்.எல்.ஏக்கள் மனு அளித்த நிலையில் அருள் விளக்கம் அளித்தார். ஜி.கே மணி கடிதத்துடன் சபாநாயகரை சந்திக்க உள்ளதாகவும் அருள் கூறியுள்ளார்.

ஆனால் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக எம்.எல்.ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். மேலும்” பாமக கொறடாவாக அருள் தொடர்வார்.. ஜி.கே மணி மூலம் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து தான் கொறடா அருளை நீக்க முடியும்.. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. ஒற்றை மனிதனாக 96,000 கிராமங்களுக்கு சென்று பாமக கட்சியை வளர்த்தேன். இதுபோன்று மன வேதனையான சில செயல்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லாம் புறம்தள்ளி விட்டு, நான் தொடர்ந்து கட்சியை வழிநடத்துவேன்..” என்றூம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RUPA

Next Post

"சிபிஐக்கு மாற்றப்படும்.." பொன்முடி ஆபாச பேச்சு வழக்கில் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..

Fri Jul 4 , 2025
பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் விசாரணை செய்ய தயங்கினால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் குறித்தும் சைவ, வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் […]
1358436

You May Like