தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார். கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியிலும், இரண்டாவது மாநாடு மதுரையிலும் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது திமுகவையும் பாஜகவையும் விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து மாவட்ட வாரியாக சனிக்கிழமை தோறும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் கடந்த 27ஆம் தேதி கரூருக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜயை பார்க்க வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் விஜய் பார்க்க வந்தவர்கள் துடிதுடித்து உயிரிழந்து கொண்டிருக்க, விஜயோ களத்தில் நிற்காமல் சென்னை வந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கரூர் சம்பவம் அந்த கட்சிக்கு பெரும் கரும்புள்ளியாக மாறியது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது. தொடர்ந்து விஜய்க்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜய்யின் அரசியல் மூவ், அவரது பெர்சனல் விஷயம் என பலவற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் வைரலான வீடியோ 2005 ஆம் ஆண்டும் நடந்தது. அப்போது தஞ்சாவூரில் 18 ஏழை பெண்களுக்கு விஜய் திருமணம் செய்து வைத்தார். அவரிடம் ரசிகர்கள் சிலர் ஒரு கேள்வியை முன்வைத்தார்கள். அதாவது அரசியலில் தளபதியாக உலா வருவீர்களா என்று கேட்டார்கள். அதற்கு பதிலளித்த விஜய், ‘எனக்கு அரசியல் தெரியாது. சினிமாவில் சிறந்த இடத்தை பிடிக்க போராடுவதே எனது லட்சியம்’ என்று பதிலளித்திருக்கிறார். இப்போது அந்த வீடியோக்களை பதிவிட்டு, ‘அவர் அப்போதே சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்’ என்று விமர்சனம் செய்துவருகிறார்கள்.



