சில துரோகிகளும், தீய சக்திகளும் என்னையும் எனது தந்தை ராமதாஸையும் பிரித்துவிட்டார்கள். ராமதாஸை சுற்றியுள்ள சில திமுக கைக்கூலிகள், துரோகிகள் அவரைவிட்டு விலகும் வரை அவருடன் இணையமாட்டேன் என தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெற்ற உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் அன்புமணி அறிவிப்பு.
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியான பா.ம.க.வில் தற்போது அப்பா ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் எழுந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் கட்சிக்கு புதிய நிர்வாகி நியமனம் செய்வதும், அதை எதிர்த்து ராமதாஸ் நிர்வாகியை நியமிப்பது என கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோதல்கள் அதிகரித்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இதனால் பா.ம.க. அன்புமணி, பா.ம.க. ராமதாஸ் என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே இவர்கள் இருவரையும் இணைக்க பலக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அன்புமணி ராமதாஸ் தனது அப்பா ராமதாஸூடன் இணைய மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெற்ற உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி; சில துரோகிகளும், தீய சக்திகளும் என்னையும் எனது தந்தை ராமதாஸையும் பிரித்துவிட்டார்கள். ராமதாஸை சுற்றியுள்ள சில திமுக கைக்கூலிகள், துரோகிகள் அவரைவிட்டு விலகும் வரை அவருடன் இணையமாட்டேன் என அன்புமணி அறிவித்துள்ளார்.



