எங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.. கூட்டணியில் நான் எடுப்பது தான் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சிதம்பரத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ அதிமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் “நான் பாஜக உடன் கூட்டணி அமைத்த உடனே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.. எங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.. கூட்டணி ஆட்சி இல்லை.. கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை.. நான் எடுப்பது தான் முடிவு.. கூட்டணியில் முடிவெடுக்கும் அதிகாரம் பாஜகவுக்கு இல்லை..
எங்கள் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று தான் அமித்ஷா சொன்னார். கூட்டணி ஆட்சி என்று தவறாக புரிந்துகொண்டீர்கள்.. நான் தெளிவாக கூறிவிட்டேன்.. அதிமுக தான் பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்கும் என்று பல முறை கூறிவிட்டேன்.. இன்னும் என்ன தெளிவுப்படுத்த வேண்டும்.. கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தலாம் என்று இதையே மீண்டும் மீண்டும் தோண்டி தோண்டி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த முடியாது.. அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது.. 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைப்பது உறுதி..” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அமித்ஷா தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது..
Read More : “விஜய் கூட ஜெயிக்க மாட்டாரு.. தவெக தேறவே தேறாது.. திமுகவை திட்டினா மட்டும் போதுமா” விளாசிய ஜெகதீஸ்வரன்..