இனி ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்..!! சிவாங்கியின் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களாக கோமாளியாக சிவாங்கி தனது இன்னசென்டான நடவடிக்கைகள், நிகழ்ச்சிக்கு இடையே அவர் பாடும் பாடல்கள் என ஃபேவரைட் கோமாளியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து, குக்காக களமிறங்கி ஆச்சரியமளித்தார். முதலில் சொதப்பினாலும் மெல்ல தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். கடந்த சில வாரங்களுக்கு முன் எலிமினேஷன் ரவுண்டில் விஜே விஷால் மற்றும் ஷிவாங்கி போட்டி போட்டனர். இதில் விஜே விஷால் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இரண்டு முறை ‘குக் ஆஃப் தி வீக்’ வாங்கிய விஜே விஷால் எலிமினேட் ஆகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. மேலும், ஷிவாங்கியை விஜய் டிவி வேண்டுமென்றே காப்பாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இந்த சர்ச்சைக்கு சிவாங்கி உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த ஷோவை உள்ளபடியே பார்த்து மகிழுங்கள். ஒருவரை குறைவாக மதிப்பிடுவது ஈஸி என பதிலளித்தார். இந்நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு சிவாங்கி பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் அடுத்த குக் வித் கோமாளி சீசனில் கலந்துகொள்வீர்களா..? எனக் கேட்க, அது நிச்சயம் நடக்காது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என பதிலளித்திருக்கிறார். ஒரு சீசனில் போட்டியாளராக கலந்துகொள்பவர் அடுத்த சீசனில் கலந்துகொள்ள முடியாது என்பதால் அவர் இப்படி பதில் அளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

CHELLA

Next Post

பெற்ற தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவலம்…..! 68 நாளில் விசாரணை முடிந்து 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்….!

Sat May 13 , 2023
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 41 வயதான எலக்ட்ரீசியன் இவர் சென்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி குடிபோதையில் இருந்தபோது, தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக கூறப்படுகிறது இதனால் பயந்து போன சிறுமி தன்னுடைய தாயிடம் இது தொடர்பாக கூறி அழுது இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய், இந்த விவகாரம் குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
pocso

You May Like