தங்கம் விலை இப்படியே போச்சுனா அவ்வளவு தான்..!! ரூ.45,000 தாண்டிய ஒரு சவரன்..!! இதுதான் காரணமாம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.44,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.5,585-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ரூ.45,280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5,660 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி ஒரு கிலோ நேற்று ரூ.77,500-க்கு விற்பனையான நிலையில், இன்று விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று 45 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு மற்றும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

தோன்றி மறையும் மாயத் தீவு!… திணறும் அறிவியல் ஆய்வுகள்!… உண்மை என்ன?

Fri Oct 20 , 2023
உலகத்தில் எந்த ஒரு மூலையில் பிறந்த மனிதரும் பரந்து விரிந்த உலகத்தில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும், யாருடைய உதவியுமின்றி ஒரு ஸ்மார்ட்போனையும் இணையத்தையும் நம்பி பயணித்துவிட முடியும் என்கிற சூழலை உருவாக்கிய ஓர் அற்புதமான அறிவியல் படைப்பு தான் கூகுள் மேம்ஸ். ஆனால் பல நேரங்களில் இதே கூகுள் மேப்ஸ் வேடிக்கைக்குரிய அல்லது ஆச்சரியமான விஷயங்கள் பலவற்றை வெளிக்கொண்டு வந்துள்ளது. அப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தீவு வடிவத்தில் […]

You May Like