மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து மீன் உற்பத்திப் பணிகளை செய்து வருகின்றனர். மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பினை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டும் மற்றும் மீன் உற்பத்தி மூலதனமான மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கும் பொருட்டும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1 எக்டேருக்கு அதிகபட்சமாக 10,000 மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5000/- மானியமாக வழங்கப்படவுள்ளது. எனவே, தங்களது மாவட்டத்திலுள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடையலாம்.