பொதுவாக, புற்றுநோய் அறிகுறிகள் உடலின் உள் உறுப்புகளில் தென்படும். ஆனால் சில நேரங்களில் கால்களில் தோன்றும் மாற்றங்களும் புற்றுநோயின் முன்னெச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
சிலருக்கு கால்களில் நரம்புகள் வெளிப்படையாக நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படும். நரம்புகள் கிளைகளாகப் பரவி, அந்த இடத்தில் இரத்தக் கட்டிகள் உருவாகும் இந்த நிலை ‘ஆழமான நரம்பு இரத்த உறைவு (Deep Vein Thrombosis)’ என்று அழைக்கப்படுகிறது. இதில், ஒரு காலில் வீக்கம், வலி, சிவத்தல், தோல் மெலிதல் போன்றவை முக்கிய அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் கணையப் புற்றுநோயுடன் (Pancreatic Cancer) தொடர்பு கொண்டிருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள கணையம் செரிமானத்திற்கும், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றுகிறது. இதில் ஏற்படும் புற்றுநோய், இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கணையப் புற்றுநோயின் மற்ற அறிகுறிகளில் மஞ்சள் காமாலை, அடர் நிற சிறுநீர், வெளிர் நிற மலம், தோல் அரிப்பு, எடை இழப்பு, குமட்டல் மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும். மேலும், கணையம் பாதிப்படையும் போது நீரிழிவு நோய் உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி தாகம், சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சினைகளும் தோன்றலாம்.
இத்தகைய எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உடனே மருத்துவ பரிசோதனை செய்வது உயிரை காக்கும் முக்கிய வழியாகும். புற்றுநோயை வெல்ல முடியாத நோயாக அல்லாது, முன்கூட்டியே கண்டறிந்தால் குணமாகும் நோயாக பார்க்கும் மனப்பாங்கு மக்கள் மத்தியில் உருவாக வேண்டும்.
Read more: 5 ஆண்டுகளில் ரூ. 58 லட்சம் சம்பாதிக்கலாம்.. லாபத்தை வாரி வழங்கும் அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!!



