100 ரூபாய் முதலீடு செய்தால் லட்சத்தில் ரிட்டன்.. செம லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்..!!

Post Office Special Scheme.jpg

தபால் நிலையத்தில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. தொடர் வைப்புத் திட்டமும் இதில் ஒன்று. இதில் சேர்ந்தால் ஒரே நேரத்தில் பெரிய தொகையை உங்களால் பெற முடியும்.


மாறிவரும் தேவைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப சேமிக்கும் பழக்கம் மக்களிடையெ அதிகரித்து வருகிறது. அதற்காக நல்ல வருமானத்தை ஈட்டுவதற்கான வழிகளை அவர்கள் தேடுகிறார்கள். அத்தகையவர்களுக்கு அஞ்சல் அலுவலகம் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. தபால் நிலையத்தில் கிடைக்கும் அத்தகைய சிறந்த திட்டங்களில் ஒன்று RD ஆகும்.

இந்த RD திட்டம் மத்திய அரசு நிறுவனமான தபால் நிலையத்தால் வழங்கப்படுகிறது. தொடர் வைப்புத் திட்டம் என்று கூறும் இந்த சேமிப்புத் திட்டம், முதலீட்டாளர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில், தினமும் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். எந்த ஆபத்தும் இல்லாமல் துல்லியமான வருமானத்தைப் பெறலாம். இதற்கான வட்டிப் பலன் நிர்ணயிக்கப்படும்.

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இடையில் எடுத்துக்கொள்ள விரும்பினால், குழந்தைக்கு 3 வயது ஆன பிறகு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வட்டி விகிதம் குறையும். இல்லையெனில், நீங்கள் கடன் வாங்கலாம். இந்த மாதம் கணக்கு தொடங்கி குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கிறீர்கள் என்றால் மறு மாதமும் அதே தொகையைத் தான் முதலீடு செய்ய முடியும்.

ஐந்தாண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு ஆர்.டி. கணக்கை நீட்டிக்க விரும்பினால், அஞ்சலகத் தொடர் வைப்புத் திட்டத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். ஐந்தாண்டுகளில் உங்களுக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும்.

100 ரூபாய் முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம்?

தினமும் 100 ரூபாய் சேமித்தால் மாதத்திற்கு 3,000 ரூபாய். இந்த 3,000 ரூபாயை மாதா மாதம் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். உங்களுடைய சேமிப்புக்கு கணிசமான வட்டி வருமானமும் கிடைக்கும். நீங்கள் செய்யும் முதலீட்டை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மாதம் ரூ.3,000 முதலீடு செய்து வந்தால் சேமிப்பதே தெரியாமல் சேமிக்கலாம். தற்போது RD திட்டத்திற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.

5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் ரூ.1,80,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு 6.7 சதவீத வட்டி கிடைத்தால் ரூ.34,097 கிடைக்கும். முதிர்வு காலத்தில் உங்களுடைய சேமிப்பையும் வட்டியையும் சேர்த்து ரூ.2,14,097 பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல சந்தை அபாயங்களுக்கு உட்படாமல் இருப்பதால் நிலையான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற திட்டமாக இது இருக்கும்.

Read more: இனி பத்திரப்பதிவு லேட் ஆகாது.. சார் – பதிவாளர்களுக்கு பறந்தது உத்தரவு..!! – பத்திரப்பதிவுத்துறை அதிரடி

Next Post

சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்..!! இந்த 2 கீரைகளை கட்டாயம் சாப்பிடுங்க..!! மருத்துவர் சொன்ன சூப்பர் டிப்ஸ்..!!

Wed May 28 , 2025
சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு, நம் உடலில் உள்ள ரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், ரத்தம் சுத்தமாக இருக்காது. பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும். இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும்போது ஒன்று செயலிழந்தாலும், மற்றொன்றை பயன்படுத்தலாம். ஆனால், சிறுநீரகங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாத நிலையைக் சிறுநீரக செயலிழப்பு என்று சொல்லப்படுகிறது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் மற்றும் பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தக் […]
Kidney Keerai 2025

You May Like