நடைப்பயிற்சி உடல்நலத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. உடலின் அனைத்து உறுப்புகளும் சுறுசுறுப்பாகச் செயல்பட, ஒருவர் தேவையான அளவு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆனால், எவ்வளவு நடக்க வேண்டும் என்பது அவர்களின் வயது, உடல் நிலை மற்றும் சக்தியைப் பொறுத்தது.
இந்த நிலையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் “6-6-6 நடைப்பயிற்சி விதி” அதிக ஆரோக்கிய நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது. இது, வழக்கமான நடைப்பயிற்சிக்குப் பிறகு அடுத்த நிலை பயிற்சியாகக் கருதப்படுகிறது. தினமும் ஒரே மாதிரி நடப்பவர்களுக்கு, இந்த விதி புதிய பலன்களைத் தரக்கூடும்.
6-6-6 நடைப்பயிற்சி விதி என்ன? பொதுவாக, பெரும்பாலான மக்கள் காலையிலோ அல்லது மாலையிலோ நடப்பார்கள். 6-6-6 விதியின் அர்த்தம், நீங்கள் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு நடக்க வேண்டும் என்பதாகும். இருப்பினும், நடைப்பயிற்சிக்குச் செல்வதற்கு முன்னும் பின்னும், நீங்கள் 6 நிமிடங்கள் வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
- 6 நிமிடங்கள் – வேகமான நடை
- 6 நிமிடங்கள் – மிதமான நடை
- 6 நிமிடங்கள் – மெதுவான நடை
இவ்வாறு மொத்தம் 18 நிமிடங்களை தொடர்ந்து நடைப்பயிற்சியாக மேற்கொள்வதே “6-6-6 நடைப்பயிற்சி விதி” எனப்படும். நடப்பதற்கு முன் சூடுபடுத்துவதும், நடந்த பிறகு குளிர்விப்பதும் உடலை சமநிலையில் வைத்திருக்கும். இது தேவையற்ற காயங்களைத் தடுக்கிறது. இதைப் பின்பற்றுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
6-6-6 நடைபயிற்சி விதியின் நன்மைகள்: காலையில் நடப்பது வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மாலையில் நடப்பது மனதையும் உடலையும் அமைதிப்படுத்துகிறது. தினமும் காலை மற்றும் மாலை 6 மணிக்கு நடப்பது எடையைக் குறைக்க உதவுகிறது. இந்த நடைபயிற்சி உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
இதய ஆரோக்கியம்: தினமும் நடப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது இதயப் பிரச்சினைகளைத் தடுக்கலாம்.
கீழ் உடல் வலிமையடைகிறது: நமது கீழ் உடல்தான் நமது முழு உடலையும் சுமந்து செல்கிறது. நடைபயிற்சி அதை வலிமையாக்க உதவுகிறது. நீங்கள் 6-6-6 நடை விதியைப் பின்பற்றினால், நீங்கள் விரைவாக முடிவுகளைக் காணலாம்.
மனம் நிம்மதியாக இருக்கிறது: நடைபயிற்சி படிப்படியாக மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நடைபயிற்சி மனதை அமைதியாகவும் ரிலாக்ஸாகவும் வைத்திருக்க உதவுகிறது.
உடல் நெகிழ்வானதாக மாறும்: தினமும் வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் பயிற்சிகள் செய்வதால் உடல் எளிதாக வளைகிறது. கூல்-டவுன் பயிற்சிகள் செய்வதால் தசை அசௌகரியம் குறைகிறது. தசைகள் இறுக்கமாக இருப்பதை விட தளர்வாக இருக்கும்.
Read more: நாயின் நாக்கு நம் தோலைத் தொட்டாலும் ரேபிஸ் வருமா..? – மருத்துவர் விளக்கம்