ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! நவ.30-ம் தேதி கடைசி நாள்…!

money Pension 2025

அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட கட்டமைப்பானது, நிர்வாகத்தை மேம்படுத்துதல், சந்தாதாரர் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் இந்தியாவின் பரந்த நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பங்களிப்பது ஆகியவற்றில் ஆணையத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். தேசிய ஓய்வூதியத் திட்டம்/ அடல் ஓய்வூதியத் திட்டத்தில் நீண்ட காலம் செல்லுபடியாகும் அரசுப் பத்திரங்களுக்கு இரட்டை மதிப்பீட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள முன்மொழிகிறது.

இந்த கட்டமைப்பானது நீண்டகால நிதி நிலைத்தன்மை மற்றும் பொருளாதார பொருத்தத்தை உறுதி செய்யும் அதே வேளையில், சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியச் செல்வக் குவிப்புகளை இன்னும் தெளிவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த ஆலோசனை அறிக்கை பிஎஃப்ஆர்டிஏ இணையதளத்தில் ஆராய்ச்சி மற்றும் வெளியீடு என்ற தேர்வின் கீழ் கிடைக்கிறது. (https://pfrda.org.in/en/web/pfrda/consultation-papers).

தேசிய ஓய்வூதியத் திட்ட பங்கேற்பாளர்கள், வருங்கால சந்தாதாரர்கள், ஓய்வூதிய நிதிகள், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் ஆணையம் இந்தத் திட்டம் குறித்து கருத்துக்களைக் கோருகிறது. தங்கள் கருத்துகளையும், உள்ளீடுகளையும் பங்குதாரர்கள் நவம்பர் 30, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1,000 உறுதி..!! ஒப்புதல் வழங்கிய நிதித்துறை..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!!

Sat Oct 25 , 2025
திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், ஆட்சிக்கு வந்தப் பிறகு 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, முதலில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். உரிமைத் தொகை கிடைக்கப் பெறாத குடும்பங்கள் அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, […]
1000 2025

You May Like