தகாத உறவு..!! பெண்களை கல்லால் அடித்துக் கொல்லும் நடைமுறை மீண்டும் அமல்..!! உலக நாடுகள் அதிர்ச்சி..!!

தகாத உறவில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் வழக்கம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு 2021இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, தலிபான்கள் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால், ஆப்கானிஸ்தானில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஏனெனில், தலிபான்களின் ஆட்சியில் பல்வேறு விதிமுறைகள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு இது கொடூரமானது. ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும், இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, பெண் கல்வி, பெண் சுதந்திரம், உலக நாடுகளுடன் நட்புறவு என அனைத்தும் நடக்கும் என உறுதியளித்தனர். ஆனால், அது நடக்கவில்லை, மாறாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பெண்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்த கொடூர தண்டனை மீண்டும் அமலுக்கு வரும் என தலிபான் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா அறிவித்துள்ளார். விபச்சாரம், மோசடி உள்ளிட்ட தகாத உறவுகளில் ஈடுபடும் பெண்களை, பொது வெளியில் நிற்க வைத்து கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில், தகாத உறவில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்துக் கொல்லும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வரும் என தலிபான்கள் அறிவித்திருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தலிபான்களின் அறிவிப்புக்கு சர்வதேச பெண்கள் உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Read More : Ration | அரிசி அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Chella

Next Post

அவசர நிலை பிரகடனம்!… ஏப்.8ல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை!

Thu Apr 4 , 2024
சூரிய கிரகணத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நயாகரா பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து ஏப்ரல் 8ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சோமாவதி அமாவாசை தினமான ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்த நாளில் நிகழ உள்ளது. சூரிய கிரகணம் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. அந்தவகையில், ஏப்ரல் 8 அன்று […]

You May Like