சுவர் இடிந்து விழுந்து அரசுப் பள்ளி மாணவன் பலியான விவகாரம்.. 3 பேர் மீது வழக்குப்பதிவு..!

thiruvallur school

திருவள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..


திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

இந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் மாணவன் மோகித் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்ததாக அவர் தெரிவிதிதுள்ளார்.. உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், அவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்..

இந்த நிலையில் திருவள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

RUPA

Next Post

அடுத்தடுத்து அதிரடி காட்டும் செங்கோட்டையன்..!! தவெகவில் இணைந்த அமமுகவின் முக்கிய நிர்வாகிகள்..!! குஷியில் விஜய்

Wed Dec 17 , 2025
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தற்போது மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் வேகம் காட்டி வருகிறது. குறிப்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைந்திருப்பது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் டிசம்பர் 20, 2025 அன்று நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான […]
tvk vijay n

You May Like