சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்கான மிகக் குறைந்த வயது எந்த நாட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
சமீபத்தில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்கான குறைந்தபட்ச வயது 18 வயதுக்குக் குறைவாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது. அதாவது, உடலுறவு கொள்வதற்கு இருவரும், முழுமனதுடன் ஒப்புதல் அளிப்பது ஆகும். ஒருமித்த சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை 16 வயதாகக் குறைக்கக் கோரப்பட்ட ஒரு மனுவின் விசாரணையின் போது மத்திய அரசு இந்த கருத்தை தெரிவித்தது..
இது தொடர்பாக, மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், தற்போதுள்ள சட்டங்கள் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்கும், சிறார்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.
சரி, சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்கான மிகக் குறைந்த வயது எந்த நாட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதைக் குறைக்கக் கூடாது என்பதற்கான அரசாங்கத்தின் வாதம் என்னவென்றால், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்க இந்த வயது வரம்பு அவசியம்.
உடலுறவுக்கான சம்மதத்திற்கான வயது அனைத்து நாடுகளிலும் வேறுபட்டது. பல நாடுகளில் உடலுறவுக்கான சம்மத வயது 14 முதல் 16 வரை இருந்தாலும், சில நாடுகளில் 11 அல்லது வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. சமீபத்தில் ஈராக் பெண்களுக்கான சம்மத வயதை 9 ஆகக் குறைத்ததற்காகவும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது, இருப்பினும் இது பின்னர் திருத்தப்பட்டது.
அந்த வகையில் நைஜீரியாவில், 11 அல்லது 12 வயதிலேயே உடலுறவுக் கொள்ளலாம்.. அதாவது இந்த நாட்டில் இவ்வளவு குறைந்த வயதில் உடலுறவு கொள்வது என்பது பாலியல் வன்கொடுமையாக கருதப்படாதாம்.. அதே நேரத்தில் பிலிப்பைன்ஸில் சம்மத்துடன் கூடிய உடலுறவின் வயது தற்போது 12 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இது குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது.
அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் உடலுறவுக்கான சம்மதத்திற்கான வயது வேறுபட்டது. ஆனால் இந்த வயது 16 வயது முதல் 18 வயது வரை. இதற்குக் குறைவான வயதில் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது.
ஜெர்மனியில், உடலுறவு கொள்வதற்கான வயது 14 ஆண்டுகள். ஆனால் உறவில் ஈடுபடும் இரு தரப்பினருக்கும் இடையே அதிக வயது வித்தியாசம் இருக்கக்கூடாது, இல்லையெனில் அது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது. இத்தாலியிலும், உடலுறவு கொள்வதற்கான சம்மத வயது 14 ஆண்டுகள், ஆனால் ஜெர்மன் விதி இத்தாலிக்கும் பொருந்தும். அங்கும், மற்ற தரப்பினர் வயதில் மூத்தவராக இருந்தால், அவர் பாலியல் வன்கொடுமைக்கு தண்டிக்கப்படுவார். பிரேசிலில், 14 வயதுடைய சிறுவர் மற்றும் சிறுமிகள் சம்மதத்துடன் உடலுறவு கொள்ளலாம். நீங்கள் இங்கிலாந்தில் உடலுறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது 16 வயதாகும்.
இந்தியாவின் விவாதம்:
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) 2012 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டுள்ளபடி, இந்தியாவில் சம்மதத்திற்கான தற்போதைய வயது 18 ஆகும். இதன் பொருள், சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், 18 வயதுக்குட்பட்ட நபருடனான எந்தவொரு பாலியல் செயல்பாடும் சட்டப்பூர்வ பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது.
இந்திய சட்ட ஆணையம் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்து வருகிறது, மேலும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தனிநபர்களுக்கிடையேயான வயது வித்தியாசம் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் உண்மையான சம்மதத்தைக் கருத்தில் கொள்ள நீதிமன்றங்களுக்கு விருப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.