குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உணவில் இந்த 6 பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்!…

குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் சில உணவுப் பொருட்கள் குறித்தும் அவற்றின் நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்.


இன்றைய சூல்நிலைகளில் குழந்தைகள் சரியாக சாப்பிடுவது இல்லை. இருப்பினும் ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து ஸ்நாக்ஸ் ஐட்டங்களையே குழந்தைகள் அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பொதுவாகவே சாப்பாடு கொடுப்பதை விட ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பாடுடன் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். அந்தவகையில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் இந்த பொருட்களை சேர்த்து கொடுங்கள். குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

வைட்டமின்-இ மற்றும் வைட்டமின்-சி அதிகம் உள்ள அவகேடோவை குழந்தையின் உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளலாம்.இந்த பழத்தில் பாந்தோத்தேனிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. இது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் குழந்தைக்கு அவகேடோ சாலட்டையும் நீங்கள் கொடுக்கலாம்.குழந்தை ஒல்லியாக இருந்தால் நீங்கள் வாழைப்பழத்தை கொடுக்கலாம். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. வாழைப்பழத்தை நன்கு மசித்து ஜூஸ் போன்று குழந்தைக்கு கொடுக்கலாம். குழந்தை இதனை மகிழ்ச்சியுடன் குடிக்கும். குழந்தைகளுக்கு முக்கியமாக பருப்பு வகைகளை கொடுக்க வேண்டும். பருப்பில் கால்சியம், வைட்டமின்கள், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதை சாப்பிடுவதன் மூலம், குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பருப்பு வகைகள் சாப்பிடுவதன் மூலம் எடையை அதிகரிக்க இயலும்.

முட்டை குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் நிறைவுற்ற கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு முட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு வெவ்வேறு முட்டை உணவுகளை நீங்கள் செய்து கொடுக்கலாம். இதனால் முட்டை சாப்பிடும் பழக்கமும் குழந்தைக்கு ஏற்படும்.நெய் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதை ரொட்டி அல்லது பருப்பு செய்து ஊட்டும்போது கலந்து கொடுக்கலாம். இதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. குழந்தையின் எடையை அதிகரிப்பதில் நெய் பெரிதும் உதவுகிறது.

KOKILA

Next Post

வெயில் காலங்களில் கை, கழுத்து பகுதிகள் கருத்துப்போகிறதா?... இதை செய்தாலே போதும்..!

Wed Mar 22 , 2023
வெயில் காலத்தில் நாம் வெளியே சென்று வந்தாலே கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் நிறம் கருமையாகிவிடும். இந்த கருமையை போக்கு இந்த குறிப்புகளை கடைபிடியுங்கள். வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க எவ்வளவு ஆரோக்கியமான பானங்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்துக்கொள்கிறோமோ அதே அளவு சரும பராமரிப்பிலும் தனி கவனம் செலுத்தவேண்டும். ஏனென்றால் வெயிலில் சென்றுவந்தால் வறட்சி ஏற்பட்டு முகம், கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகள் கருமை நிறமாக மாறிவிடும். […]

You May Like