தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு.. விஜய் முக்கிய அறிவிப்பு..! பரபரக்கும் அரசியல் களம்..!

Vijay 2025 1

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. இ


இந்த நிலையில், தவெக கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 128 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Read More : டெல்லி பாஜகவின் அடுத்த மூவ்; நயினார் தலைமையில் புதிய குழு அமைப்பு..! பரபரக்கும் தேர்தல் களம்..!

RUPA

Next Post

“வெட்கக்கேடு..! அமெரிக்கா கழுத்தை நெரித்ததால் பிரதமர் மோடி இந்தியாவை விற்றுவிட்டார்..” ராகுல் காந்தி ஆவேசம்..!

Wed Feb 11 , 2026
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.. மத்திய பட்ஜெட் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், நாட்டை விற்றுவிட்டதாக அவர் கூறினார். இதற்கு நேர்மாறாக, சமீபத்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்பிடம் கவலைகளை எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இந்தியா கூறியதை அவர் முன்வைத்தார், இதை காங்கிரஸ் தலைவர் சசி தரூர் முன்னர் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்றும், […]
rahul gandhi

You May Like