AI தொழில்நுட்பத்தில் இந்தியாவின் புரட்சி.!! அமெரிக்காவின் டெவினுக்கு சவால் விடும் தேவிகா.!! இதன் சிறப்புகள் என்ன.?

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் தகவல் தொடர்புத்துறையில் அசுரத்தனமான வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல துறைகளிலும் மனித சக்தியின் தேவை குறைந்து வருகிறது. பல நிறுவனங்களும் AI தொழில் நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியதால் தங்கள் நிறுவனங்களில் ஆட்கொடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஐடி துறை வல்லுநர்கள் தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவராலும் தேவிகா என்ற பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது. மென்பொருள் துறையில் கோடிங் எழுதுவது முதன்மையானதாகும். அந்தத் துறையில் பணிபுரிபவர்களுக்கான சம்பளம் பதவி உயர்வு போன்றவை அவர்களது கோடிங் எழுதும் ஆற்றலை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. மென்பொருள் துறையில் சிறந்து விளங்குவதற்காக பலரும் கோடிங் எழுத சிறு வயது முதலை பயின்று வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கோடிங் துறையிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மென்பொருள் நிறுவனங்கள் கோடிங் எழுதத் தொடங்கின. கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மின் பொறியாளரான டிவியின் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே இதற்குப் போட்டியாக இந்தியாவின் சார்பில் தேவிகா செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த 21 வயதான முஃபீத், தேவிகா செயற்கை நுண்ணறிவு மென்பொருள் திட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார். இந்த தேவிகாவானது டெவின் செயற்கை நுண்ணறிவை போல் இல்லாமல் ஓபன் சோர்சாக உருவாக்கப்பட இருக்கிறது. மேலும் தேவிகா சாப்ட்வேர்களுக்கான கோடிங் எழுதுவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் பிழைகளை சரி செய்யும் வகையில் உருவாக்கப்பட இருக்கிறது. மேலும் தேவிகா ஓபன் சோர்ஸ் ஆக இருப்பதால் இதனை யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவிகா செயற்கை நுண்ணறிவு மென்பொறியாளர் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறது. விரைவிலேயே யோற்றிற்கான பணிகள் முடிந்து ஐடி துறையில் தேவிகா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தேவிகா அறிமுகமான பின்பு தான் அது டெவீனுக்கு சரியான போட்டியாளராக இருக்குமா என்று தெரியவரும். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மென்பொறியாளருக்கான எதிர்பார்ப்பு ஐடி துறையில் அதிகரித்து இருக்கிறது.

Read More: Election 2024: ஆபரேஷன் தமிழ்நாடு.!! 4 ரோடு ஷோ, 1 பொதுக்கூட்டம்.!! பக்கா பிளானுடன் களமிறங்கும் அமித் ஷா.!!

Next Post

ஏவுகணை சோதனை -கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

Wed Apr 3 , 2024
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் நிழவி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டு கொள்ளவில்லை.  தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர தொலைவு ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை செய்துள்ளது. முன்னதாக, வட கொரியா தனது கிழக்கு கடற்பகுதியில் இருந்து, […]

You May Like