நீரஜ் கைவான் இயக்கத்தில், கரண் ஜோஹர் தயாரித்த ‘ஹோம்பவுண்ட்’ (Homebound) திரைப்படம், 98வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடித்த இந்தப் படம், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் பரிந்துரையாக இருந்தது. தங்கள் திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்ததற்கு கரண் ஜோஹரும் நீரஜ் கைவானும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நேற்று அகாடமி 12 பிரிவுகளுக்கான இறுதிப் பட்டியல்களை அறிவித்தது. சிறந்த சர்வதேச பிரிவில், அவர்கள் 15 படங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த 15 படங்களில் இருந்து ஐந்து படங்கள் இறுதிப் பரிந்துரைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும், அவை ஜனவரி 22 அன்று அறிவிக்கப்படும்.
இந்தியாவின் ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம், அர்ஜென்டினாவின் ‘பெலன்’, பிரேசிலின் ‘தி சீக்ரெட் ஏஜென்ட்’, பிரான்சின் ‘இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்’, ஜெர்மனியின் ‘சவுண்ட் ஆஃப் ஃபாலிங்’, ஈராக்கின் ‘தி பிரசிடென்ட்ஸ் கேக்’, ஜப்பானின் ‘கோகுஹோ’, ஜோர்டானின் ‘ஆல் தட்ஸ் லெஃப்ட் ஆஃப் யூ’, நார்வேயின் ‘சென்டிமென்டல் வேல்யூ’, பாலஸ்தீனத்தின் ‘பாலஸ்தீன் 36’, தென் கொரியாவின் ‘நோ அதர் சாய்ஸ்’, ஸ்பெயினின் ‘சிராட்’, சுவிட்சர்லாந்தின் ‘லேட் ஷிஃப்ட்’, தைவானின் ‘லெஃப்ட்-ஹேண்டட் கேர்ள்’ மற்றும் துனிசியாவின் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ ஆகிய படங்களுடன் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
கரண் ஜோஹர் பெருமகிழ்ச்சி
‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த செய்தியால் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் பெருமகிழ்ச்சி அடைந்தார். படத்தின் சுவரொட்டியைப் பகிர்ந்த அவர், தனது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும், இந்தச் சாதனையால் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் பதிவிட்டுள்ளார்.. மேலும் அவரின் பதிவில், “98வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்காக ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்குக் கிடைத்த அசாதாரண அன்புக்கும் ஆதரவிற்கும் நாங்கள் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
“ஹோம்பவுண்ட் படத்தின் இந்தப் பயணத்தால் நான் எவ்வளவு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், எல்லையில்லா ஆனந்தத்துடனும் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
தர்மா மூவிஸ் நிறுவனத்தில் உள்ள நாங்கள் அனைவரும் எங்கள் திரைப்படப் பட்டியலில் இந்த பெருமைமிக்க மற்றும் முக்கியமான படத்தைக் கொண்டிருப்பதில் பாக்கியம் பெற்றவர்கள்.. எங்கள் கனவுகளில் பலவற்றை நனவாக்கியதற்கு நன்றி @neeraj.ghaywan. கேன்ஸ் முதல் ஆஸ்கர் இறுதிப் பட்டியல் வரை, இது ஒரு அற்புதமான பயணமாக இருந்துள்ளது! இந்தச் சிறப்புமிக்க திரைப்படத்தின் ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் எனது அன்பு! மேலும் மேலும் முன்னேறிச் செல்வோம்.. ஹோம்பவுண்ட் இப்போது நெட்ஃபிளிக்ஸில் ளிபரப்பாகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்..
இயக்குநர் நீரஜ் கைவான் ரியாக்ஷன்
இயக்குநர் நீரஜ் கைவான், தனது படைப்பின் போஸ்டரை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “98வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பிரிவில் ஹோம்பவுட்ன் திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது! உலகம் முழுவதிலுமிருந்து நாங்கள் பெற்ற அசாதாரண அன்பு மற்றும் ஆதரவிற்காக நாங்கள் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் எதைப் பற்றியது?
‘ஹோம்பவுண்ட்’ திரைப்படத்தின் கதை, காவல்துறை அதிகாரியாக ஆக விரும்பும் ஷோயப் (இஷான் கட்டர்) மற்றும் சந்தன் (விஷால் ஜெத்வா) என்ற இரண்டு பால்ய நண்பர்களைச் சுற்றி நகர்கிறது.. இருப்பினும், அமைப்போ அல்லது சமூகக் கட்டமைப்போ அவர்களின் பயணத்தை எளிதாக்கதில்லை. இது நட்பு, கடமை மற்றும் ஒடுக்குமுறை, வர்க்கம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இளம் இந்தியர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை ஆராயும் ஒரு உணர்ச்சிகரமான கதை.
‘ஹோம்பவுண்ட்’ திரைப்படத்தை கரண் ஜோஹர், ஆதார் பூனாவாலா, அபூர்வா மேத்தா, சோமன் மிஸ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர். மரிஜ்கே டிசோசா மற்றும் மெலிடா டோஸ்கன் டு பிளாண்டியர் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாகவும், மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் பிரவீன் கைர்னார் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. ‘ஹோம்பவுண்ட்’ தற்போது நெட்ஃபிக்ஸ்-ல் ஒளிபரப்பாகிறது..
Read More : எந்திரன் படத்தின் வில்லனை ஞாபகம் இருக்கா..? உண்மையில் அவர் என்ன செய்கிறார் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க..!



