இண்டிகோ நெருக்கடி 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், சனிக்கிழமை மட்டும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், பயணிகள் மாற்று வழிகளை தேர்வு செய்யத் தொடங்கியதால், சில விமான நிறுவனங்கள் விமான கட்டணங்களை திடீரென அதிகரித்துள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக விமான டிக்கெட் விலை 5 முதல் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது..
இந்த நிலையில் மத்திய அரசு விமான கட்டண உயர்வு குறித்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. நாடாளுமன்ற விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation – MoCA) வெளியிட்ட அறிக்கையில்” இண்டிகோ நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தடங்கலின் காரணமாக, சில விமான நிறுவனங்கள் கட்டணங்களை அசாதாரணமாக அதிகரித்துள்ளன என்பதை அமைச்சகம் கவனித்துள்ளது.
இதனால் பயணிகள் சிரமப்படலாம் என்பதால், அனைத்து பாதிக்கப்பட்ட வழித்தடங்களிலும் நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க கட்டணங்கள் மட்டும் விதிக்கப்பட வேண்டும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.. அதற்காக, அரசு தனது ஒழுங்குமுறை அதிகாரத்தைப் பயன்படுத்தி, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கட்டண உச்சவரம்பை (fare caps) கடைப்பிடிக்கும்படி உத்தரவு வெளியிட்டுள்ளது.
மேலும் “விமான நிறுவனங்கள் அனைத்தும் இந்த புதிய கட்டண வரம்புகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். நெருக்கடி சூழல் முழுமையாக சீராகும் வரை இந்த கட்டணக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். சந்தையில் விலை ஒழுங்கைக் காக்க, பயணிகள் சிக்கலில் உள்ள நேரத்தை பயன்படுத்தி அவர்களை அதிக விலையால் சுரண்டுவதைத் தடுப்பதே இதன் நோக்கம்..
குறிப்பாக அவசரமாக பயணம் செய்ய வேண்டிய மூத்த குடிமக்கள், மாணவர்கள், நோயாளிகள் போன்றோர் தேவையற்ற பொருளாதார சுமையை அனுபவிக்க வேண்டாம் என்பதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கம்.” என்று தெரிவித்துள்ளது..
மேலும் “ விமான கட்டணங்கள் எவ்வாறு பயண தளங்களில் (OTAs) மற்றும் விமான நிறுவனங்களின் தளங்களில் மாறுகின்றன என்பது ரியல்-டைம் தரவுகளின் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். ஆன்லைன் பயண தளங்களுடன் சேர்ந்து, விமான நிறுவனங்களுடனும் அமைச்சகம் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டண வரம்புகளை மீறினால், உடனடி திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
பயணிகள் சந்தித்த சிரமங்கள் – விமான ரத்து மற்றும் டிக்கெட் விலை உயர்வு
பயணிகள் மேலும் பல சிரமங்களை சந்தித்தனர். விமான டிக்கெட் விலைகள் திடீரென அதிகரித்து, சில வழித்தடங்களில் வழக்கமான விலையை விட 5 மடங்கு வரை உயர்ந்தன. வெள்ளிக்கிழமை இண்டிகோ சேவை தடங்கல்களின் மிக மோசமான நாளாக இருந்தது.. ஏறத்தாழ 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. முக்கிய விமான நிலையங்களில் ஒரே நாளில் ரத்தான விமானங்கள் பெரிதும் அதிகரித்தன.
மும்பை அதிகம் பாதிக்கப்பட்டது – அங்கு 109 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன் பின்னர் டெல்லியில் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, நாட்டின் இரண்டு மிகப் பெரிய விமான நிலையங்களிலும் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஹைதராபாத் – 69 விமானங்கள் ரத்து
பெங்களூரு – 50 விமானங்கள் ரத்து
பூனே – 42 விமானங்கள் ரத்து
சென்னை – 30 விமானங்கள் ரத்து
சாதாரணமாக தினமும் சுமார் 2,300 விமானங்கள் இயக்கும் மற்றும் 400-க்கும் மேற்பட்ட விமானங்களை கொண்ட இண்டிகோ, தற்போது குழு (crew) பற்றாக்குறை மற்றும் திட்டமிடல் தவறுகள் காரணமாக கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
Read More : சிக்கன், மட்டனை ஏன் சேர்க்கல..? புடினுக்கு வழங்கப்பட்ட விருந்து குறித்து கார்த்தி சிதம்பரம் கேள்வி..!



