காமதேனுவை மீட்ட இந்திரன்.. காரணம் அறிந்து அருள் தரும் ஈசன்.. சென்னையில் இப்படி ஒரு கோவிலா..? பலருக்கு தெரியாது..

saidapet temple

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ காரணீஸ்வரர் கோயில், சுமார் 500 ஆண்டு பழமையான புனித சிவாலயமாக பக்தர்களின் நம்பிக்கையை ஈர்த்து வருகிறது. வரலாற்று சிறப்பு மற்றும் ஆன்மிக பலன் ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்ட இந்த ஆலயம், தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் தலமாக திகழ்கிறது.


இந்த ஆலயத்தின் தல வரலாறு மிகவும் விசேஷமானதாகும். வேதங்களில் குறிப்பிடப்படும் இந்திரன், திருமால், பிரம்மன் உள்ளிட்ட தெய்வங்களும் இங்குள்ள சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வசிஷ்டர் முனிவர் அளித்த காமதேனு பசு, சிவபூஜையில் இடையூறு செய்ததால் சாபம் பெற்று காட்டுப் பசுவாக மாறியதாக புராணம் தெரிவிக்கிறது.

அதை மீட்டெடுக்க இந்திரன் இந்த பகுதியில் பெரு மழையை ஏற்படுத்தி சோலை உருவாக்கி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து கடுமையான தவம் மேற்கொண்டார். அவரது பக்தியால் திருப்தியடைந்த சிவபெருமான், காமதேனுவை மீட்டுத் தந்ததாக நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில், “காரணத்தை அறிந்து அருள் புரியும் ஈசன்” என்ற பொருளில் இங்குள்ள சிவன் காரணீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார்.

இந்த ஆலயத்தில் மூலவராக அருள்பாலிக்கும் காரணீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அவரை வழிபட்டால் வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, தொழில் வளர்ச்சி போன்ற பல வேண்டுதல்கள் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன் இங்கு வந்து வழிபடுவது பலரின் வழக்கமாக உள்ளது.

இதேபோல், ஆலயத்தில் அருள்பாலிக்கும் அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். திருமணம், பிள்ளைப்பேறு மற்றும் செல்வ வளம் பெற பெண்கள் அதிகம் இந்த அம்மனை வழிபடுகின்றனர். சக்தி வழிபாட்டில் முக்கிய இடம் பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

மேலும், இந்த கோயிலில் நந்தி, விநாயகர், முருகன் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகளும் அமைந்துள்ளன. பழமையான கல்வெட்டுகளின் அடிப்படையில், இந்த ஆலயம் “காருண்ணிய ஈஸ்வரர்” என்ற பெயராலும் அறியப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more: ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையில் வேறு யாராவது அமர்ந்திருக்கிறார்களா? இந்த எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புங்கள்; உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும்..!

English Summary

Indra, who rescued Kamathenu.. God knows the reason and gives grace.. Is there a temple like this in Chennai..? Many people don’t know..

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு..! மே 1 முதல் மாறவிருக்கும் விதிகள்..! அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் இவை தான்..!

Fri May 1 , 2026
மே மாதம் தொடங்கிவிட்டது.. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் நெருங்கும்போது, ​​பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருவது வழக்கம். மக்களைப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கக்கூடிய மாற்றங்கள் தற்போது வரவுள்ளன. இவை குறித்து முன்னரே அறிந்திருப்பது அவசியமாகும். மே 1 முதல் பல்வேறு மாற்றங்கள் மக்களைப் பாதிக்கவுள்ளன. சமையல் எரிவாயு (LPG) முதல் வங்கிச் சேவைகள் வரை, பல புதிய விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன. உங்கள் மாத பட்ஜெட்டைப் பாதிக்கக்கூடிய இந்த மாற்றங்கள் […]
may 1 changes

You May Like