விண்வெளி மையத்தில் பணிபுரிய விருப்பமா..? ரூ.1.4 லட்சம் வரை சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது..? 

vssc job

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) ஒரு பகுதியாகும். இந்த அறிவிப்பின்படி, பல்வேறு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் மொத்தம் 147 வேலைகள் நிரப்பப்படும். விண்வெளி மையத்தில் பணிபுரிவதன் மூலம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கு பங்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.


காலிப்பணியிட விவரம்:

டெக்னீசியன் – பி (ஃபிட்டர்):

காலியிடங்கள்: 56

கல்வித்தகுதி: SSLC/SSC/10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப துறையில் ITI/NTC/NAC சான்றிதழ்.

வரைவாளர் – பி:

காலியிடங்கள்: 7

கல்வித்தகுதி: SSLC/SSC/10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வரைவியல் துறையில் ITI/NTC/NAC.

மருந்தாளுநர் – A:

காலியிடம்: 1

தகுதி: SSLC/SSC தேர்ச்சி மற்றும் மருந்தக டிப்ளமோ (முதல் வகுப்பு).

தொழில்நுட்ப உதவியாளர்:

காலியிடம்: 1

தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ.

அறிவியல் உதவியாளர்:

காலியிடம்: 1

தகுதி: அறிவியல் துறையில் பட்டம்.

நூலக உதவியாளர்:

காலியிடம்: 1

தகுதி: நூலக அறிவியல்/தகவல் அறிவியலில் பட்டம் மற்றும் முதல் வகுப்பில் M.Lib.I.Sc.

சம்பளம்:

* தொழில்நுட்ப வல்லுநர் – பி, வரைவாளர் – பி பதவிகளுக்கு மாத சம்பளம் ரூ. 21,700 – ரூ. 69,100/-.

* மருந்தாளர் – ஏ பதவிக்கு மாத சம்பளம் ரூ. 29,200 – ரூ. 92,300/-,

* தொழில்நுட்ப உதவியாளர், அறிவியல் உதவியாளர், நூலக உதவியாளர் பதவிக்கு மாத சம்பளம் ரூ. 44,900 – ரூ. 1,42,400/-.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD பிரிவினருக்கு (General/EWS) 10 ஆண்டுகள், PwBD பிரிவினருக்கு (SC/ST) 15 ஆண்டுகள் மற்றும் PwBD பிரிவினருக்கு (OBC) 13 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. 

எப்படி விண்ணப்பிப்பது? தகுதியானவர்கள் VSSC இணையதளம் www.vssc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 18, 2025.

Read more: 2030ல் உலகத்தை கலங்கவைக்கும் புதிய வைரஸ்.. ஜப்பானிய பாபா வாங்காவின் பகீர் கணிப்பு..!!

Next Post

நடிகர் விஜயின் ஒரு தலை காதலி.. சோகத்தில் முடிந்த திருமண வாழ்க்கை.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

Sun Jun 8 , 2025
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய் ஒரு தலையாக காதலித்த பெண் அஞ்சு அரவிந்த். நந்தினி கேரக்டரில் நடித்ததன் மூலம் மிக பிரபலமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவர். அண்மையில் அளித்த பேட்டியில், தனது முதல் திருமணம் விவாகரத்துடன் முடிந்தது என்றும், இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு கணவர் உயிரிழந்ததால் கடுமையான […]
anju aravind 9 2025 06 5fc64b19542c717b45dfa4a133445cab

You May Like