தொலைதூரக் கல்வி மூலம் கால்நடை பராமரிப்பு, கோழி வளர்ப்பு படிப்பு அறிமுகம்…!

college 5g mobile 2025

தொலைதூரக் கல்வி மூலம் கால்நடை பராமரிப்பு, கோழி வளர்ப்பு மற்றும் இவை சார்ந்த துறைகளில் தேவைப்படும் திறன்மிக்க மனித சக்தியை உருவாக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் மூலம் தொழிற்பயிற்சி அளிப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி தொடக்கத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் படிப்பு மையங்கள் மூலம் கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகளும் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு, அடுமனை மற்றும் மிட்டாய் தயாரிப்பில் இரண்டு பட்டயப் படிப்புகளும் வழங்கப்படும். இதற்கான பாடங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ளவர்களையும் இதில் இணைக்கும் வகையில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் சான்றிதழ் படிப்புகளில் சேரலாம்.

தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மூலம் 14 வயது நிறைந்தவர்கள் 10-ம் வகுப்பு தேர்வும் 15 வயது நிறைந்தவர்கள் 12-ம் வகுப்பு தேர்வும் எழுதலாம். 2 மொழிப்பாடங்கள் 3 முதன்மை பாடங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெறுவோர் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி தேர்வுக்கு இணையான தகுதியை பெறுவதோடு போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்க முடியும். முதன்மை பாடங்களைப் பொறுத்தவரை அரசியல் சட்டத்தில் 8-வது அட்டவணையில் உள்ள எந்த மொழியிலும் தேர்வு எழுத முடியும். வழக்கமாக ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் தேர்வுகள் நடைபெறும் என்றாலும், தேர்வர்கள் விரும்பும் மாதம் அல்லது நாளிலும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் 277 கல்வி நிறுவனங்களும், அங்கீகாரம் அளிக்கப்பட்ட 151 தொழிற்பயிற்சி நிறுவனங்களும், 93 திறந்த நிலை அடிப்படை கல்வி நிறுவனங்களும் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். 31 துறைகளில் 86 தொழிற்பயிற்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

Vignesh

Next Post

நைட் க்ரீம் VS டே க்ரீம்!. சருமப் பராமரிப்புக்கு எது பெஸ்ட்?. நிபுணர் அட்வைஸ்!.

Sat Aug 30 , 2025
சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, தொடர்ச்சியான பழக்கம் முக்கியமானது. . ஆனால் நீங்கள் தூங்கும் போது உங்கள் நைட் கிரீம் ஏன் அற்புதங்களைச் செய்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? காலை மற்றும் இரவு நேர சருமப் பராமரிப்பிற்கு இடையிலான வேறுபாடுகளைப் பற்றி விவாதித்து, இரவு நேர சருமப் பராமரிப்பின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம். அந்தவகையில், அழகுசாதன பிளாஸ்டிக் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும், DHI இந்தியாவின் மருத்துவ […]
night cream vs day cream 11zon

You May Like