அனைவரும் தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமித்து, நல்ல வருமானத்தைப் பெறக்கூடிய பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யத் திட்டமிடுகிறார்கள். இதன் மூலம், ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையில் பணப் பற்றாக்குறையைச் சந்திக்க வேண்டியதில்லை. இது தொடர்பாக அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் பிரபலமாக இருந்தாலும், நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் திட்டங்களுக்கும் அதிக தேவை உள்ளது.
எல்.ஐ.சி-யின் சரல் ஓய்வூதியத் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தத் திட்டத்தில் நல்ல பலன்கள் உள்ளன. இதில், ஒரே ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம். இந்த ஓய்வூதியத் திட்டம், ஓய்வுக்குப் பிந்தைய நிதித் திட்டமிடலுக்கு மிகவும் பொருத்தமானது.
ஒருமுறை முதலீடு செய்துவிட்டால், முதுமையில் உங்களுக்கு எந்த நிதிச் கவலையும் இருக்காது. மேலும், உங்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவீர்கள். இந்த வகையில், எல்.ஐ.சி சரல் ஓய்வூதியத் திட்டம் ஒரு சரியான தேர்வாகும். இந்தத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு 40 வயது முதல் 80 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை நீங்கள் தனியாகவோ அல்லது கணவன்-மனைவியாக சேர்ந்தோ எடுக்கலாம். ஓய்வு காலத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு, இது எல்.ஐ.சி-யால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். முதுமைக் காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்கும் ஒரு திட்டம் இது.
இந்தத் திட்டத்திற்கு மொத்தமாக ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு, உங்கள் வாழ்நாள் முழுவதும் வழக்கமான தவணைகளில் பணத்தைப் பெறலாம். இந்த பாலிசி குறிப்பாக ஓய்வு பெற்றவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒருவர் சமீபத்தில் ஓய்வு பெற்று, தனது பி.எஃப் நிதியில் ஒரு பகுதியையும், ஓய்வின் போது பெற்ற பணிக்கொடையையும் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தொகைக்கு அவர் ஓய்வூதியம் பெறத் தொடங்குகிறார். அவர் பெறும் ஓய்வூதியத் தொகை அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்கப்படும்.
எல்.ஐ.சி சரல் ஓய்வூதியத் திட்டம், பாலிசி தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் பாலிசியை சரண்டர் செய்யும் விருப்பத்தையும் பாலிசிதாரர்களுக்கு வழங்குகிறது. இது மரணப் பலனையும் வழங்குகிறது. அதாவது, பாலிசிதாரர் இறந்தால், முதலீடு செய்யப்பட்ட தொகை அவரது நாமினிக்குத் திருப்பித் தரப்படும்.
எல்.ஐ.சி சரல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், நீங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 12,000 பெறலாம். இந்தத் திட்டத்திற்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. அதாவது, நீங்கள் விரும்பிய அளவு முதலீடு செய்யலாம். முதலீட்டின் அடிப்படையில் நீங்கள் ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ், ஒருமுறை பிரீமியம் செலுத்திய பிறகு, ஓய்வூதியத்தை ஆண்டுதோறும், அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர அடிப்படையில் பெறலாம். மேலும், இந்த பாலிசியை வாங்கிய பிறகு உங்களுக்கு கடன் வசதியும் கிடைக்கிறது.
இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பாலிசிதாரர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு கூட கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக முதலீடு செய்வதன் மூலம் வருடாந்திர ஓய்வூதியத்தை வாங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியப் பலன்களைப் பார்த்தால், எல்ஐசி கால்குலேட்டரின்படி, 30 லட்சம் ரூபாய்க்கு வருடாந்திர ஓய்வூதியத் திட்டத்தை வாங்கும் 42 வயதுடைய ஒருவருக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ. 12,388 உத்தரவாத ஓய்வூதியம் கிடைக்கும். இது அவரது வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்தத் திட்டத்தை ஆன்லைனில் வாங்க, நீங்கள் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in என்ற முகவரிக்குச் செல்லலாம்.
Read More : 50 பைசா, 1 ரூபாய் நாணயங்கள் புழக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டதா? ரிசர்வ் வங்கி என்ன சொன்னது?



