அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது. டிரம்பின் முன்மொழிவுக்கு ஈரானின் முதல் எதிர்வினையாகக் கூறப்படும் நிலையில், 15 அம்ச போர் நிறுத்த திட்டத்தை அளவுக்கு மீறியது என்று நிராகரித்துள்ளது.. ஹார்முஸ் நீரிணை மீதான இறையாண்மை உட்பட புதிய கோரிக்கைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
ஈரான் 5 புதிய கோரிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்த போருக்கான இழப்பீடு, ஈரான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எதிர்ப்பு குழுக்களுக்கு எதிரான எதிரியின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக நிறுத்துதல் மற்றும் பல கோரிக்கைகள் இதில் அடங்கும்.
ஈரானின் கோரிக்கைகள் என்ன?
நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய அதிகாரிகள் ஐந்து முக்கிய கோரிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளனர். அவை:
எதிரியின் “ஆக்கிரமிப்புகள் மற்றும் படுகொலைகளை” முழுமையாக நிறுத்துதல்.
இஸ்லாமியக் குடியரசின் மீது மீண்டும் போர் திணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய உறுதியான வழிமுறைகளை நிறுவுதல்.
போர் சேதங்கள் மற்றும் இழப்பீடுகளை உத்தரவாதத்துடனும் தெளிவாகவும் வழங்குதல்.
பிராந்தியம் முழுவதும் உள்ள அனைத்து முனைகளிலும் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து எதிர்ப்பு குழுக்களுக்கும் போரின் முடிவு
ஹார்முஸ் நீரிணை மீது ஈரான் தனது இறையாண்மையை செலுத்துவது ஈரானின் இயற்கையான மற்றும் சட்டப்பூர்வமான உரிமையாகும், அது அவ்வாறே நீடிக்கும். மேலும், இது மற்ற தரப்பினரின் கடமைகளைச் செயல்படுத்துவதற்கான ஒரு உத்தரவாதமாகும், எனவே இது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஈரானிய அதிகாரிகள் மேலும் டொனால்ட் டிரம்பை கண்டித்துள்ளனர்.. “போர் எப்போது முடிவடையும் மற்றும் என்ன நிபந்தனைகளின் கீழ் முடிவடையும் என்பதை அமெரிக்க ஜனாதிபதியால் கட்டளையிட முடியாது.. தங்கள் விருப்பப்படி ஒரு நேரத்தில் மற்றும் தங்கள் சொந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் தெரிவித்தனர்.



