“அமெரிக்கா இந்த போரில் எதையும் சாதிக்கல.. ஏன்னா நம்ம கொடுத்த அடி அப்படி..” ட்ரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான் உச்சதலைவர்..

AA1HsWLj 1

ஈரான் அமெரிக்காவின் முகத்தில் பலத்த அடியை கொடுத்தது என்றும், அமெரிக்கா இந்த போரில் எதையும் சாதிக்கவில்லை என்று அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீண்டும் எச்சரித்துள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு முதன்முறையாக உரையாற்றிய அவர் “அமெரிக்க ஜனாதிபதி தனது அறிக்கைகளில் ஒன்றில் ஈரான் சரணடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். சரணடையுங்கள்! என்று கூறினார்.. இது இனி செறிவூட்டல் அல்லது அணுசக்தித் துறை பற்றிய கேள்வி அல்ல, மாறாக ஈரானின் சரணடைதல் பற்றியது.. ஆனால் அத்தகைய நிகழ்வு (சரணடைதல்) ஒருபோதும் நடக்காது. அது ஒருபோதும் நடக்காது.” என்று தெரிவித்தார்.


கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது ஈரானின் வான்வழித் தாக்குதல்களை குறிப்பிட்டு பேசிய அவர், ” பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க மையங்களை ஈரான் அணுக முடியும் என்பதும், அது அவசியம் என்று கருதும் போதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். இதுபோன்ற நடவடிக்கை எதிர்காலத்திலும் மீண்டும் மீண்டும் செய்யப்படலாம். ஏதேனும் ஆக்கிரமிப்பு நடந்தால், எதிரி நிச்சயமாக அதிக விலை கொடுப்பார்.” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் “ஈரானின் எதிரிகள் ஏவுகணைகள் அல்லது நமது அணுசக்தி திட்டம் போன்ற சாக்குப்போக்குகளைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் நாம் சரணடைய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஈரானின் சரணடைதலில் மட்டுமே அமெரிக்கா திருப்தி அடையும் என்ற உண்மையை டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் சரணடைதல் ஒருபோதும் நடக்காது, நமது நாடு சக்தி வாய்ந்தது,” என்று கூறினார்.

ஈரான் அமெரிக்காவின் முகத்தில் பலத்த அடியை கொடுத்தது.. அது பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களில் ஒன்றான அல்-உதெய்த் விமானத் தளத்தைத் தாக்கி சேதப்படுத்தியது,” என்று கூறினார்.

அமெரிக்காவிற்கு எதிரான எதிர்ப்பிற்கு தனது நாட்டை வாழ்த்திய அவர், “நமது அன்பான ஈரான் அமெரிக்க ஆட்சியை வென்றதற்கு எனது வாழ்த்துக்கள். அமெரிக்க ஆட்சி நேரடியாகப் போரில் நுழைந்தது, ஏனெனில் அது அவ்வாறு செய்யவில்லை என்றால், சியோனிச ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அது உணர்ந்தது. அந்த ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் அது போரில் நுழைந்தது, ஆனால் அமெரிக்காவால் எதையும் சாதிக்கவில்லை. அனைத்து குழப்பங்களுடனும், அந்தக் கூற்றுக்களுடனும், ஈரானின் அடிகளால் தோற்கடிக்கப்பட்ட இஸ்ரேல் நசுக்கப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி ஈரானின் முக்கிய அணு மின் நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுக்க தொடங்கியது. ஆனால் அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை ஈரான் மீதான போரில் இணைந்தது. தனது B2 குண்டுவீச்சு விமானங்கள் ஈரானில் உள்ள மூன்று அணு ஆயுதத் தளங்களைத் தாக்கின. அமெரிக்கா இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு மிட்நைட் ஹேமர் என்று பெயரிட்டது.

ஆனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்க தளம் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால் ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று ட்ரம்ப் முடிவு செய்தார். இந்த தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் – ஈரான் ஒரு போர் நிறுத்தத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார். போர் நிறுத்தத்திற்கு பிறகும் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்திய நிலையில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ட்ரம்ப் இஸ்ரேலை எச்சரித்தார். அதன்பின் இஸ்ரேல் – ஈரான் மோதல் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : “இதை செய்யக்கூட தயங்க மாட்டோம்..” பயங்கரவாதிகளுக்கு ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை..

RUPA

Next Post

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி தினமும் இந்த நேரத்தில் நெட் பேங்கிங் இயங்காது..

Thu Jun 26 , 2025
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் சேவை சில நாட்களுக்கு தடைபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நெட் பேங்கிங் தொடர்பான சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். எஸ்பிஐ நெட் பேங்கிங் சேவை எஸ்பிஐ தனது வலைத்தளத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட […]
SBI customers 696x416.jpg 1

You May Like