Lok Sabha 2024| 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் தேமுதிக.? பிரேமலதா வெளியிட்ட புதிய அறிவிப்பு.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு சமூகமாக முடிந்துள்ள நிலையில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணி அமைக்க மற்ற கட்சிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. தேமுதிக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி தொடர்பாக மூன்று கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தின. எனினும் அந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தேமுதிக கட்சி சார்பாக போட்டியிட விருப்பமுள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளிக்கலாம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் வேட்பாளர் விருப்ப மனு அளிக்க தகுதியானவர்கள் என அந்தக் கட்சி அறிவித்திருக்கிறது . வருகின்ற மார்ச் 19ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை மாற்றி இருபதாம் தேதி மாலை 5 மணிக்குள் தேமுதிக தலைமையகத்தில் சமர்ப்பிக்குமாறு தனிக்கு நிர்வாகம் பலி கொடுத்து இருக்கிறது.

பொதுத் தொகுதியில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு கட்டணமாக 15,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தனித் தொகுதியில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு கட்டணமாக 10,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மார்ச் 21 ஆம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் தொடங்கும் எனவும் திமுக அறிவித்திருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டு இருப்பது தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறதா.? என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.

Read More: Election 2024 | வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம்.!! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.!!

Next Post

Lok Sabha 2024| அதிமுக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை.! விரைவில் வெளியாக இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்.!

Sun Mar 17 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக அரசு அதன் கூட்டணி கட்சிகள் உடன் சுமுகமாக தொகுதி பங்கீட்டை முடித்துக் கொண்டது. ஆனால் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களது […]

You May Like