பரப்புரை முடிந்த பிறகு சோசியல் மீடியாவில் பிரச்சாரம் செய்வது குற்றமா..? சத்யபிரதா சாஹூ அதிரடி பதில்..!!

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்றும் இதற்காக பல புதிய முயற்சிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், ”தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் தாங்கள் பயிற்சி பெறும் இடத்திலேயே வாக்களிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 85 வயதைக் கடந்தவர்களும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, சுமார் 4 லட்சம் பேர் அதற்கான படிவத்தை ஆர்வத்துடன் பூர்த்தி செய்து அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ரயில்வே துறை மற்றும் ஊடகங்களில் பணியாற்றுவோரும், தபால் வாக்கு முறையை பயன்படுத்தலாம் என்ற அளவிற்கு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கமே இதற்குக் காரணம். மக்கள் ஓரிடத்தில் கூடி ஜனநாயகக் கடமையாற்றும் இடமாக வாக்குச் சாவடிகள் இருப்பதால், இங்கு நிழல் தரும் பந்தல்கள், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, உதவியாளர் போன்ற வசதிகள் செய்து தரப்படுகிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ”பணபலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வாகன சோதனைகளில் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்றும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 7 கண்காணிப்பு வாகன அணிகள் வீதம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பிறகும் சமூக ஊடகங்கள், யூடியூப் போன்றவற்றில் பிரச்சாரம் செய்யப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், பொது இடங்களில் மக்களைத் திரட்டி வாக்கு சேகரிப்பதற்கு அனுமதியில்லை என்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது என்பது தனி நபர் தேர்வு” என்றும் கூறினார்.

Read More : Toll | 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது..!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

பெற்றோர்களே... மாணவர்களுக்கு இலவச கல்வி…! விண்ணப்பம் குறித்து முக்கிய அறிவிப்பு…!

Thu Mar 28 , 2024
குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2024-25ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ எல்கேஜி வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல்‌ 3-வது வாரத்தில் இருந்து rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌. நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக்‌ கூடுதலாக விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டால் […]

You May Like