மனைவியின் விருப்பமின்றி பாலியல் உறவு வைத்துக் கொண்டால் குற்றமா..? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதை குற்றமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருமண பாலியல் வல்லுறவைக் குற்றமாக அறிவிப்பது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இருப்பினும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியிருந்தனர். ‘அரசியலமைப்புக்கு எதிரானது என்பதற்காக, இந்திய தண்டனைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 162 ஆண்டுகள் கழிந்த பின்னரும் திருமணமான ஒரு பெண்ணின் நீதிக்கான குரலுக்கு செவி சாயக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் உள்ள இந்த விதிவிலக்கு அரசியல் அமைப்பு எதிரானது இல்லை. கொஞ்சம் தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டியது’ என்று நீதிபதி ஷக்தேக் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

மனைவியின் விருப்பமின்றி பாலியல் உறவு வைத்துக் கொண்டால் குற்றமா..? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான குஷ்பூ சைஃபி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இது தொடர்பான மனுக்களுக்கு மத்திய அரசு வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை மார்ச் 21ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

CHELLA

Next Post

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்...! முதல்வர் அறிவிப்பு...!

Tue Jan 17 , 2023
ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் அறிவித்துள்ளார். உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் நேற்று நடந்தது. இதில் அரவிந்த் ராஜ் என்னும் மாடுபிடி வீரர், யாரும் எதிர்பாராத விதமாக வாடிவாசலிலிருந்து வெளியே வந்த காளையின் தாக்குதலால் படுகாயமடைந்தார். பின் அவரை அங்கிருந்த மருத்துவக்குழுவினர் மீட்டு முதலுதவி அளித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் அங்கு […]
முதல்வருக்கு உடல்நலக்குறைவு..! அரசு நிகழ்ச்சிகள் திடீர் ரத்து..! மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்..!

You May Like