எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லையா? கடன் தொல்லை அதிகமாகிவிட்டதா? குடும்பத்தில் சூழ்ந்துள்ள வறுமையை அகற்ற நீங்கள் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், சில எளிய பரிகாரங்களையும் செய்ய வேண்டும். அதில் முக்கியம் மிளகு தீபம். அந்தவகையில் இந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம்.
கடனில் மூழ்கிவிட்டால் நிம்மதியே போய்விடும்.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாக நகர்ந்து கொண்டிருக்கும், இதனால் நிம்மதியை இழந்து மன உளைச்சலும் பெருகிவிடும். இதனால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டும் என்றால், இன்று திங்கள் கிழமை இரவில் 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியால் வைத்து மூட்டையாக கட்டி அதனை தலையனைக்கு அடியில் வைத்து உறங்கவேண்டும் செவ்வாய் காலை குளித்துவிட்டு, அந்த மூட்டையை பைரவர் சன்னதிக்கு எடுத்துச்சென்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். தொடர்ந்து 9 வாரம் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம்.
இதேபோல், கடன் தொல்லை நீங்க வேண்டுமானால், பௌர்ணமி தினத்தன்று, குலதெய்வத்துக்கு நெய்வேத்தியமாக பாசிப்பருப்பிலான உணவை பிரசாதமாக வைத்து வேண்டிக் கொள்ளலாம். 12 பௌர்ணமிகளுக்கு இப்படி செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட கடனும் தீரும் என்பார்கள்.. இப்படி பிரசாதமாக வைக்கப்பட்ட பாசிப்பருப்பை அனைவருக்கும் தருவதற்கு முன்பு காகத்துக்கும் வைத்துவிட்டுபகிர்ந்தளிக்கலாம்.
Readmore: விஜய்யுடன் நான் செல்போனில் பேசவில்லை…! சர்ச்சைக்கு எடப்பாடி பழனிச்சாமி முற்றுப்புள்ளி…!