வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய போது விஜய் கண் கலங்கி உருக்கமாக பேசினார்… அப்போது “ இந்த தேர்தலில் உங்க வீட்டில் உள்ள ஒரு விஜய் தான், ஒரு விஜி தான் வேட்பாளராக நிற்கப் போகின்றனர்.. உங்கள் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி வேட்பாளர் என்றால் உங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என்று அனைவருக்குமே தெரியும்.. இது நம் எதிரிகளுக்கு கூட தெரியும்.. அதனால் அவர்கள் நம் மீது அவ்வளவு அவதூறு பரப்புகின்றனர்..
ஆனால் என் மீது அவதூறு பரப்பினால், அது மக்கள் மீது அவதூறு பரப்புவது மாதிரி என்று அவர்களுக்கு தெரியாது.. எனக்கு அரசியல் தெரியவில்லை என்றால், அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வது மாதிரி,, என்னை அசிங்கமாக பேசினால், அது மக்களை அசிங்கமாக பேசுவது மாதிரி என்று.. எனக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் அது மக்களுக்கு எதிரான செயல் என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.. இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை.. இந்த விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி.. ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்க முடியாது.. இது சென்சிட்டிவான செண்டிமெண்ட்.. இதை யாரும் அசைக்க முடியாது..” என்று ஆவேசமாக பேசிய விஜய் கண்கலங்கினார்..
இந்த நிலையில் விஜய் அழுதது கூட ஸ்கிரிப்ட் தான் என்பது தெரியவந்துள்ளது.. அந்த ஸ்கிரிப்டின் பேப்பரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதில் எந்த வாக்கியத்தை எப்படி பேச வேண்டும்? எவ்வளவு கேப் விட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.. அதாவது கண்ணீர் விட்டது கூட அந்த ஸ்கிரிப்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ” Note : இந்த வரியை பேசி முடித்துவிட்டு சிறிது gap விட வேண்டும்.. பேச முடியாதது போல் செய்து, மைக்கை விட்டு சற்று நகர்ந்து சென்று அழவும்.. மறுபடியும் மைக் பக்கம் வந்து, கண்கலங்கி sorry சொல்லிவிட்டு emotional-ஆக பேச தொடங்கவும்..” என்று எழுதப்பட்டுள்ளது.. அந்த பேப்பரில் என்ன இருக்கிறதோ விஜய்யும் இன்று அதையே தான் செய்தார்..
விஜய் பேசுவது எல்லாமே ஸ்கிரிப்ட் தான் என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.. படத்தில் டயலாக மனப்பாடம் செய்து பேசி பேசி ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் விஜய்யால் எதுவும் பேச முடியாது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.. இந்த சூழலில் விஜய்யின் ஸ்கிரிப்ட் பேப்பர் இந்த சந்தேகத்தை உறுதியாக்கும் வகையில் அமைந்துள்ளது.



