ரிஷி சுனக் பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்தவரா இந்திய வம்சா வழியை சேர்ந்தவரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரிஷியின் தந்தை வழி தாத்தா பாகிஸ்தானின் குஷ்ரன்வாலா பகுதியை சேர்ந்தவர் அவரது தந்தை வழி பாட்டி டெல்லியை சேர்ந்தவர். இந்த தம்பதி 1937ல் கென்யாவுக்கு சென்றனர். அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் ரிஷியின் தந்தை யஷ்விர். இவர் தான்சானியாவை சேர்ந்த இந்தியாவை சேர்ந்த உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டதன் பேரில் பிறந்தவர் ரிஷியின் தாய் இதனால் ரிஷி பாகிஸ்தான் வழியா , இந்திய வம்சாவழியா ? என்ற குழப்பம் எழுந்துள்ளது..
ரிஷி சுனக் 3ம் சார்லைஸ சந்தித்து முறைப்படி பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2 பிரதமர்கள் பதவி விலகிய நிலையில் இவர் அடுத்ததாக வந்திருக்கின்றார். இவர் சவால்களை தாண்டி தொடர்வாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பிரிட்டன் பொருளாதாரம் உச்சத்தை தொட்டு 10 சதத்தை தாண்டி உள்ளது. இதன் மூலம் மக்கள் வாங்கும் பொருட்களின் விலை அதிகரித்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் பிரிட்டன் அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நாணய கொள்கையை இறுக்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் கட்டாயம் பிரிட்டன் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்துவிடும். இதேவேளையில் பிரிட்டன் பொருளாதாரம் மீண்டு வர ரிஷி சுனக் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வரி உயர்வு நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
குறுகிய காலத்திற்கு மினி பட்ஜெட் வெளியிடப்பட உள்ளது இதை அடிப்படையாக வைத்து பிரிட்டன் பொருளாதாரம் பங்குச்சந்தை முதலீடு வர்த்தகம் , பவுண்ட் மதிப்பு ஆகியவை உள்ளது எனவே இது முக்கியமானதாக கருதப்படுகின்றது.