எதிர் நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோட்டில், சக்தி இராமேஸ்வரம் நோக்கி பயணிக்கிறார், அதே நேரத்தில் ஆதி குணசேகரன் தனது ஆட்களை அனுப்பி சக்தியை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறான். தனுஷ்கோடி செல்லும் வழியில், சக்தியை வழிமறித்த ரவுடிகள் துப்பாக்கியால் சுட முயற்சி செய்கிறார்கள். ஆனால் நூலிழையில் சக்தி உயிர் தப்புகிறான்.
இதையடுத்து, சக்தி தேவகியை பற்றி தெரிந்து கொள்ள தனுஷ்கோடி நோக்கி பயணத்தை தொடர்கிறார். இராமேஸ்வரத்தில் கண்ணதாசனை சந்தித்து பேசும் போது, சக்தி பல உண்மைகளை அறிகிறார். தேவகி நேபாளத்தைச் சேர்ந்தவர். நேபாளிலுள்ள சொத்துக்களை விற்று, ராமேஷ்வரம் வந்து சொத்துகளை வாங்கி செட்டில் ஆனார்கள். அப்போது, தேவகியின் குடும்பத்துக்கு ஆதி முத்து சில உதவிகளை செய்தார்.
இதனால் தேவகியின் தந்தைக்கு ஆதி முத்துவை பிடித்துவிடுகிறது. தன்னுடைய பெண்ணை ஆதி முத்துவுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார். இதற்கிடையே தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் விஷயத்தை ஆதி முத்து மறைக்கிறான். தேவகியை கல்யாணம் செய்தால், சொத்துக்களையெல்லாம் அடைந்துவிடலாம் என்கிற பேராசையில் இந்த பொய் சொல்லி இருக்கிறார்.
இருவருக்கும் திருமணம் ஆகி இராமேஸ்வரத்தில் வாழ்ந்து, ஒரு மகனை பெற்றுள்ளனர்.. அவர் தேவகியை திருமணம் செய்த விஷயம் தென்காசியில் இருந்த அவரின் குடும்பத்தினருக்கு தெரியாது. பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சாகக் கிடந்த ஆதி முத்து, தேவகி பற்றிய ரகசியங்களை தன் மூத்த மகன் ஆதி குணசேகரனிடம் சொல்லி இருக்கிறார். இதையடுத்து இராமேஸ்வரம் வந்த ஆதி குணசேகரன் தேவகியை சந்தித்து, ஆதி முத்து இறந்த விஷயத்தையும், அவருக்கு ஏற்கனவே குடும்பம் இருக்கும் விஷயத்தையும் சொல்வதோடு, நீ இந்த ஊரைவிட்டே ஓடிரு என மிரட்டுகிறார்.
மொத்தத்தில், இன்றைய எபிசோட் சக்தி மற்றும் தேவகி கதையை மையமாகக் கொண்டு, ரகசியங்கள், சாபங்கள் மற்றும் எதிர்பாராத உண்மைகள் வெளிப்படும் விதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேவகியின் மகன் தான் சக்தியா..? தேவகி என்ன ஆனார் என்பதை இனி வரும் எபிசோடுகளில் தெரிந்துகொள்ளலாம்.



