இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்று ஆதார் அட்டை என்பது ஒரு அடிப்படை அடையாளமாக உள்ளது. பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திலும் ஆதார் எண் அத்தியாவசியம். ஆனால் இதை மையமாகக் கொண்டு, தற்போது மோசடிகள் அதிகரித்து வருகிறது.
தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தகவல்களைச் சேமித்து வைப்பதால் ஆதார் அட்டையை கவனமாகக் கையாள வேண்டும். தொலைந்துவிட்டால் அல்லது தவறாகப் பயன்படுத்தினால், அது கடுமையான அபாயங்களை ஏற்படுத்தலாம். எனவே, உங்களின் ஆதார் விவரங்களைப் பாதுகாப்பதும், தவறான பயன்பாடுகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம்.
ஆதார் கார்டை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அதாவது UIDAI ஆனது ஆதார் பயன்பாட்டைக் கண்காணிக்க யூசர்களை அனுமதிக்கிறது. இதன் மூலம் உங்கள் ஆதார் எங்கு, எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தாமல் பாதுகாக்கவும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
உங்கள் ஆதாரை வேறு யாராவது தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் இருந்தால் myAadhaar என்ற போர்டலுக்கு சென்று மொபைல் எண்ணுடன் லாகின் செய்ய வேண்டும். மெனுவில் Authentication History என்பதை தேர்ந்தெடுத்து உங்களின் ஆதார் பயன்பாட்டு விவரங்கள் அறிய தேதி வரம்பை தேர்வு செய்து பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள். அப்படி சந்தேகமான செயல்பாடு ஏதாவது தெரிந்தால் 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்து அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
Read more: குட்நியூஸ்.. இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவுன்னு பாருங்க..