நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது… இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது.. இந்த தேர்தலில் 3-வது அதிமுக தள்ளப்பட்டது.. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்..
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி தலைமையில் அக்கட்சி சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும்.. இந்த தோல்வியை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு 36 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்..
எஸ்.பி, வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 36 எம்.எல்.ஏக்கள் தனியாக 3 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்த நிலிஅயில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. ஏனெனில் 3-இல் 2 பங்கு பிரிந்து சென்றால் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்பதால் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது..
இதனால் அதிமுக பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.. அதனை உறுதி செய்யும் வகையில் இன்று காலை சட்டசபை கூடிய போது எடப்பாடி தலைமையில் ஒரு பிரிவு எம்.எல்.ஏக்களும், வேலுமணி தரப்பில் ஒரு பிரிவு எம்.எல்.ஏக்களும் வருகை தந்தனர்.. இதில் ஒரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக வேண்டும் என்று ஆதரவளித்து கடிதம் வழங்கினர்..
இந்த நிலையில் இன்று மாலையில் எஸ்.பிவேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 34 எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகம் வந்தனர்.. அப்போது சட்டமன்ற அதிமுக குழு தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சி.வி. சண்முகம் தரப்பு முன்மொழிகிறது.. தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சி.வி சண்முகம் சபாநாயகரை சந்தித்ததாக கூறப்படுகிறது.. அதன்படி எடப்பாடி பழனிசாமிக்கு 23 எம்.எல்.ஏக்களும், எஸ்.பி.வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.. இதன் மூலம் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.. எஸ்.பி. வேலுமணி தலைமையிலான குழு விஜய்க்கு ஆதரவு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது..
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி சண்முகம் ” கொஞ்ச பொறுமையாக இருங்கள்.. அனைத்து கேள்விகளுக்கும் 2 மணி நேரத்தில் பதில் கிடைக்கும் என்று தெரிவித்தார்..
இதனிடையே சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.. நிர்வாகிகளிடம் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது..



