விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழிச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன. இதற்கிடையில் கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து அந்த பேராசிரியருக்கு ஆதரவாக அபிராமி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். அப்போஸ்டரில் திராவிட வெற்றி கழகம் என்ற கட்சியை அபிராமி தொடங்கியது போலவும் பொதுமக்கள் அவரை புகைப்படம் எடுப்பது போவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், விஜய்க்கு போட்டியா புதிய கட்சியை தொடங்கினாரா? இல்லை புதிய படத்தின் போஸ்டரா என்று இணையவாசிகள் குழப்பம் அடைந்துள்ளார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு பகுதியாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு பகுதியாகவும் திராவிட வெற்றிக் கழகம் என குறிப்பிட்டது இணைய வாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read more: இன்னைக்கு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. சென்னையில் எப்படி..? வானிலை மையம் விடுத்த அலர்ட்!