தவெக தலைவர் விஜய் கடந்த 18-ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக தீய சக்தி என ஜெயலலிதா கூறியது சரிதான்.. திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி.. தீய சக்தியான திமுகவுக்கும் தூய சக்திக்கும் தான் போட்டியே.. நம்பிக்கை உடன் இருங்க.. வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜய்யின் இந்த விமர்சனம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ பழைய அரசியல் கட்சிகளாக இருந்தாலும், புதிய அரசியல் கட்சிகளா இருந்தாலும் திமுகவை விமர்சனம் செய்யாமல் அவர்களால் இருக்க முடியாது என்ற சூழல் தமிழ்நாட்டில் இருக்கும்.. திமுகவை விமர்சனம் செய்தால் மட்டும் தான் அவர்கள் அரசியலில் நிற்க முடியும்..எனவெ திமுகவை விமர்சித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அது தான் யதார்த்தமான சூழல். பாஜக, அதிமுக அல்லது புதிய கட்சிகள் என எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் ஒரே கருத்து திமுக தான்.. ஆனால் மக்களுக்கான வலுவான இயக்கமாக, இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய ஒரு முதலமைச்சராக முதல்வர் அவர்கள் நல்லாட்சியை கொடுத்து வருகிறார். எனவே யாருடைய விமர்சனங்களையும் நாங்கள் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை.. அரசுக்கு நல்ல ஆலோசனை செய்யக் கூடிய கருத்துகளை நாங்கள் நிச்சயம் காது கொடுத்து கேட்டு, அதை பரிசீலிப்போம்..
அதிமுகவை கேட்டால் எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்றூ சொல்கிறார்கள்.. புதிய கட்சிகளும் எங்களுக்கும் திமுக தான் போட்டி என்கிறார்கள்.. எங்களை பொறுத்தவரை நாங்கள் யாரையும் போட்டியாக பார்க்கவில்லை.. நாங்கள் மக்களோடு இருக்கிறோம்.. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.. யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை..” என்று தெரிவித்தார்.
Read More : அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!



